Again there is strike? just fill petrol

நாள்தோறும் மாற்றப்படும் டீசல், பெட்ரோல் விலையில்வௌிப் படைத்தன்மை இல்லை, அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் தானியங்கி, விலைமாறும் கருவியை எண்ணெய் நிறுவனங்கள் பொருத்தவில்லை எனக் கூறி, வரும் 12-ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அனைத்து இந்திய பெட்ரோல் முகவர்கள் அமைப்பு(ஏ.ஐ.பி.டி.ஏ.) அறிவித்துள்ளது.

நாள் மாறும் விலை

நாடு முழுவதும் கடந்த மாதம் 16-ந் தேதி முதல் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றும் நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் அமலுக்கு கொண்டு வந்தன. ஆனால், இந்த முறையில் வௌிப்படைத் தன்மை இல்லை என்றும், தானியங்கி விலைமாறும் கருவிகளை பொருத்தவில்லை என்றும் பெட்ரோல் நிலைய முகவர்கள் குற்றச்சாட்டு கூறுகின்றனர்.

வெளிப்படைத்தன்மை இல்லை

இது குறித்து அனைத்து இந்திய பெட்ரோல் முகவர்கள் அமைப்பின்(ஏ.ஐ.பி.டி.ஏ.) செய்தித் தொடர்பாளர் அலி துருவாலா கூறுகையில், “ நாள்தோறும் மாற்றப்படும் டீசல், பெட்ரோல் விலையில் வௌிப் படைத்தன்மை இல்லை, அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் தானியங்கி, விலைமாறும் கருவியை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் நிலையங்களில் 100 சதவீதம் பொருத்தவில்லை. இது தொடர்பாக கடந்த மாதம் 29-ந்தேதி எண்ணெய் நிறுவனங்களுடன் 3 மணிநேரம் ஆலோசனை நடத்தினோம். அந்த கூட்டத்தின் முடிவில், விலையை நிலைப்படுத்த, வௌிப் படைத்தன்மை கொண்டுவர தானியங்கி கருவிகள் தேவை, அதை அளிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன.

2 கட்ட போராட்டம்

ஆனால், எப்போது அந்த தானியங்கி கருவிகளை பொருத்துவோம் என்று குறிப்பிட்ட தேதியைக் கூறவில்லை. அதனால், நாங்கள் போராட்டத்தில் இறங்கி இருக்கிறோம். இதன்படி, நாங்கள் இம்மாதம் 5ந் தேதி(நாளை), பெட்ரோலிய பொருட்களை கொள்முதல் செய்யாமல் ஒரு நாள் போராட்டமும், வரும் 12-ந்தேதிநாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்த முடிவு செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

ஆதரவு

மேற்கு வங்காள பெட்ரோல் முகவர்கள் அமைப்பின் தலைவர் துஷார் சென் கூறுகையில், “ பெட்ரோல் நிலையங்களில் தானியங்கி விலைமாறும் கருவிகளை ஒரு சதவீதம் மட்டுமே பொருத்தியுள்ளன. இன்னும் 100 சதவீதம் பொருத்தவில்லை. அதனால் 5-ந் தேதி கொள்முதல் செய்யாமல் போராட்டமும், 12-ந் தேதி வேலைநிறுத்த போராட்டமும் நடத்த உள்ளோம் ’’ என்றார்.