புதிய 500 ரூபாய் நோட்டுகள் வெளியிட 6 மாதம் ஆகும என மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி கூறினார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், "பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்கான உச்சவரம்பு ரூ.4,500ல் இருந்து ரூ.2000 என குறைக்கும் அரசின் முடிவானது நிதி தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும். புதிய ரூ.1000 நோட்டுகளை உடனடியாக வெளியிடும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை' என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக புதிய ரூ.500 நோட்டுகள் முழுவதுமாகப் புழக்கத்துக்கு வர 6 மாதங்களாகும்.
தற்போது நாட்டில் நாசிக் (மகாராஷ்டிரம்), தேவாஸ் (மத்தியப்பிரதேசம்), சால்போனி (மேற்கு வங்கம்), மைசூர் (கர்நாடகம்) ஆகிய இடங்களில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் மையங்கள் உள்ளன. அவற்றின் அச்சடிக்கும் திறனின் அடிப்படையில் பார்க்கும்போது, திரும்ப பெறப்படும் நோட்டுகளுக்கு ஈடாக புதிய நோட்டுகளை அடிக்க 6 மாதங்களாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
