பல நாட்கள் சென்று கள்ளகாதலியை பார்க்க வந்த கள்ளக்காதலன் பிறப்புறுப்பை, பெண் ஒருவர் வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் கியோன்ஜ்ஹர் மாவட்டம் ஜரபேடா கிராமத்தை சேர்ந்த நபர் 25 வயதாகும் ராஜேந்திர நாயக். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்ததாக கூறப்படுகிறது.  

இவர் சென்னைக்கு செல்வதற்கு முன்பில் இருந்தே, ஒடிசா மாநிலம் பதவுவாகான் கிராமத்தில் வசிக்கும் கமலா பத்ரா என்கிற திருமணம் ஆன பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.  இதனால் கமலா குடும்பத்தில் பிரச்சனை அதிகரித்து சமீப காலமாக கமலா தனியாக வசித்து வந்துள்ளார் .

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு ராஜேந்திர நாயக், தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது தன்னுடைய கள்ள காதலி, கமலாவையும் சென்று சந்தித்துள்ளார்.  

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது... இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சற்று நேரத்தில் சமாதானம் ஏற்பட்டதை அடுத்து நாயக் கமலாவின் வீட்டிலேயே தங்கினார். எனினும், நாயக் மீதான கோபத்தை மனதுக்குள் அடக்கி வைத்திருந்த கமலா அவர் உறங்கிக் கொண்டிருந்த போது கூர்மையான ஆயுதத்தால் அவரின் அந்தரங்க அறுத்து எறிந்தார்.

இதனால் ஏற்பட்ட கடும் வலியுடன் கமலாவின் வீட்டில் இருந்து ஓட்டம் எடுத்த ராஜேந்திர நாயக் அவருடைய வீட்டிற்கு சென்று, சம்பவம் குறித்து கூறியுள்ளார்.  உடனடியாக அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின், நாயக், கட்டாக் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார், கமலாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இது குறித்து அக்கம் பக்கத்தினர் கூறுகையில், ராஜேந்திர நாயக் உண்டான பழக்கம் காரணமாக கமலாவை விட்டு அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் பிரிந்து விட்டதாகவும். இதனால் தற்போது ராஜேந்திர நாயக்கிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி கமலா கூறி வந்ததாகவும். அனால் ராஜேந்திர நாயக்கிற்கு அவருடைய வீட்டில் பெண் பார்த்து வந்ததால் ஆத்திரம் அடைந்த கமலா இந்த செயலை செய்திருக்கலாம் என கூறியுள்ளனர்.