மாணவர்கள் கவனத்திற்கு..! புதுச்சேரி பல்கலை.யில் ph.D.படிப்பு மாணவர் சேர்க்கை குறித்து முக்கிய அப்டேட்..
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளன. www.pondiuni.edu.in என்ற இணையதளத்தில் தகுதியுடையவர்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்புகள், ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்புகள், பிஎச்டி, முதுநிலைப் பட்டயப் படிப்பு உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. இவை அனைத்திற்கும் அகில இந்திய அளவில் நடைபெற உள்ள நுழைவுத் தேர்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதற்கான அறிவிப்புகள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளன.
மேலும் படிப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு, தேர்வு முறை, தேர்வு மையங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பார்க்கலாம். நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் இங்கு படித்து வருகின்றனர். இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். வரும் 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
இந்நிலையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. www.pondiuni.edu.in என்ற இணையதளத்தில் தகுதியுடையவர்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.