Asianet News TamilAsianet News Tamil

கின்னஸில் இடம் பிடித்த ஈஷா யோகா மையத்தின் ‘ஆதியோகி’ சிலை...

Adiyogi bust declared world largest by Guinness Book of World Records
adiyogi bust-declared-worlds-largest-by-guinness-book-o
Author
First Published May 12, 2017, 8:16 PM IST


ஈஷா யோகா மையத்தின் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம்  திறக்கப்பட்ட 112 அடி ஆதியோகி சிலை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. உலகின் உயரமான மார்பளவு சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கின்னஸ் சாதனை அமைப்பு தனது இணையதளத்தில் வௌியிட்டுள்ளது.

சத்குரு ஜக்கிவாசுதேவின் ஈஷா யோகா அமைப்பு கோவை மாவட்டம்,வௌ்ளியங்கிரி மலை அடிவாரத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 24-ந்தேதி 112 அடி உயரம், 24.99 மீட்டர் அகலம், 147 அடி நீளம் கொண்ட பிரமாண்ட மார்பளவு ஆதியோகி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  இந்த சிலையைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த சிலையை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கச் செய்யும் முயற்சிகள் நடந்தன. இதையடுத்து, கடந்த மார்ச் 11-ந் தேதி கின்னஸ் அமைப்பின் சார்பில் இங்கு வந்து ஆய்வு செய்யப்பட்டது.

112 அடி உயரம், 24.99 மீட்டர் அகலம், 147 அடி நீளம் கொண்ட பிரமாண்ட மார்பளவு ஆதியோகி சிலை அமைக்கப்பட்டதை உறுதி செய்யப்பட்டு, முறைப்படி அறிவிப்புவௌியிடப்பட்டுள்ளது.

ஈஷா யோகா மையம் 2-வது முறையாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி, 8.52 லட்சம் மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது. இதற்கிடையே இதேபோல இன்னும் 3 சிலைகளை அமைக்க ஈஷா யோ மையம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios