அதானி குழுமம் மீதான வழக்கை செபியே விசாரிக்கும் : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..
அதானி குழுமம் மீதான வழக்கை பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியே விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதானி குழுமம் தனது பங்கு விலைகளை முறைகேடாக உயர்த்தியாக கடந்த ஆண்டு அமெரிக்கவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் கூறியிருந்தது. ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியது. மேலும் இதன் எதிரொலியாக அதானி குழுமத்தின் பங்கும் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனிடையே ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் அதானி குழுமம் மீதான வழக்கை பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியே விசாரிக்கும் என்று உத்தரவிட்டது. மேலும் வழக்கின் விசாரணையை செபியிடம் இருந்து மாற்ற எந்த அடிப்படையும் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல்பாடுகளில் நீதிமன்றம் நுழைய முடியாது என்பதால் செபியின் விசாரணையில் தலையிட விரும்பவில்லை என்றும் தெரிவித்தது. மேலும் இதில் புதிதாக எந்த விசாரணை குழுவையும் அமைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் உத்தரவிட்டது.
லட்சத்தீவில் இன்று ரூ.1,150 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..
22 புகார்களில் 20 புகார்கள் மீதான விசாரணையை செபி முடித்துவிட்டது என்று கூறிய நீதிபதிகள், மீதமுள்ல 2 வழக்குகள் மீதான விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்கவும் செபிக்கு உத்தரவிட்டனர். அதானி குழுமன் தொடர்பான வழக்குகளை தனி விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு ஹிண்டன்பர்க் அல்லது வேறு எந்த அறிக்கையும் அடிப்படையாக இருக்க முடியாது என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்தது. எனவே செபி சட்டப்படி தனது விசாரணையை தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் ஏதேனும் சட்ட மீறல்கள் நடந்துள்ளதா என்பதையும், அப்படியானால், சட்டத்தை மீறியுள்ளதா என்பதையும் ஆராயுமாறு மத்திய அரசு மற்றும் செபியை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. போதுமான ஆய்வுகள் இல்லாம இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, தகவல்களை ஆராயமல் மனு தாக்கல் செய்வது பொது நலன் நீதித்துறைக்கு எதிர்மறையாக அமையும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
அதானி - ஹிண்டன்பர்க் வழக்கு பின்னணி
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கெளதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் பல்வேறு மோசடிகளை செய்து பங்குச்சந்தைகளில் முறைகேடு செய்துள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. எனினும் சரியாக ஆய்வு செய்யாமல் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக அதானி குழுமம் மறுத்தது.
எனினும் இந்த ஹிண்டன்பர்கின் ஆய்வறிக்கையின் எதிரொலியாக அதானி குழுமத்தின் பங்குகளின் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் மூலம் அதானி குழுமம்140 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்தது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம், செபியின் ஒழுங்குமுறை தோல்வி மற்றும் அதானி குழுமத்தின் சட்டங்களை மீறியதாகக் கூறப்படுவதைக் கண்டறிய, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
சம்பளம் பெறுபவர்கள் கவனத்திற்கு.. ரூ.1 லட்சம் வரை விலக்கு.. மத்திய அரசு சொல்லப்போகும் குட் நியூஸ்..
இந்த குழு இரண்டு மாதங்களுக்குப் பிறகு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், அதானி குழும நிறுவனங்களால் பங்கு விலை மோசடிகள் மற்றும் விதிமுறைகளை மீறுதல் போன்ற குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று தெரிவித்தது. அதே நேரத்தில், தற்போதைய வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPI) விதிமுறைகள் குறித்து குழு சில எச்சரிக்கைகளையும் அந்த குழு வெளியிட்டது. பின்னர் கடந்த ஆண்டு, நவம்பரில், உச்ச நீதிமன்றம், அதானி குழும நிறுவனங்கள் எம்பிஎஸ் விதிமுறைகளை மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஏற்கனவே செபியின் விசாரணையின் கீழ் வருகிறது. இதனால் இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணை குழுவை உச்சநீதிமன்றம் நியமிக்க முடியாது என்று கூறியிருந்தது.