‘பாரத் ஜோடோ’ யாத்திரையில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகை ரியா சென் இன்று ராகுல் காந்தியுடன் சேர்ந்து நடைபயணம் மேற்கொண்டார்.

காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தேச ஒற்றுமையை வலியுறுத்தி ‘பாரத் ஜோடோ’ என்கிற பெயரில் நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதன்மூலம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டு உள்ளார். 

இதுவரை தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் தனது நடைபயணத்தை நிறைவு செய்துள்ள அவர், தற்போது மகாராஷ்டிராவில் தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள படூரில் ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ’ யாத்திரை நடைபெற்றது. அப்போது அதில் பிரபல நடிகை ரியா சென் கலந்துகொண்டு ராகுல் காந்தியுடன் சேர்ந்து நடைபயணத்தை மேற்கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... வைரலான சர்ச்சை பதிவுகள்... பேஸ்புக்கில் இருந்து விலகிய லவ் டுடே இயக்குனர் - தப்பு பண்ணிவிட்டதாக உருக்கம்

Scroll to load tweet…

பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகை ரியா சென் தமிழிலும் இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்படி பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மகால் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த அவர், குட்லக் படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார். இதுதவிர அரசாட்சி என்கிற படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... எல்லைமீறும் ராபர்ட்.. வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளாரா ரச்சிதாவின் கணவர் தினேஷ்?