பாலிவுட்டின் முன்னணி நடிகையான கங்கனா ரணாவத்தின் ஹேர் ஸ்டைலிஸ்ட்டும் அவரது நெருங்கிய நண்பருமான பிராண்டன் மும்பையை சேர்ந்த 16 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்தது.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர் பிரான்டன் அல்லிஸ்டர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இவர் மேக்கப்மேன் ஆகவும் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆகவும் பணிபுரிந்து வருகிறார். தற்போது நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் புதிய படத்தில் இவர்தான் நடிகைக்கு மேக்கப் மேன்.  மேலும் கங்கனாவின் ஆஸ்தான ஹேர் ஸ்டைலிஸ்டாகவும் இவர் உள்ளார். சொல்லப்போனால் நடிகை கங்கனாவின் நெருங்கிய நண்பர் இவர்.

இவரை படப்பிடிப்பு தளத்திலேயே வைத்து மும்பையின் கார் காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர். 

16 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் கைது செய்யப்பட்டதுடன் போக்சோ சட்டமும் இவர் மீது பாய்ந்தது. டேட்டிங் செயலி மூலம் அந்த சிறுவனை இவர் சந்தித்ததாகவும் அப்போது பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் சிறுவன் டேட்டிங் செயலி ஒன்றில் மிகவும் அடிமையாகி இருந்துள்ளார். 

அந்த செயலி மூலம் பாலியல் உறவுக்கு அந்த சிறுவன் பலரை அழைத்துள்ளார். அதில் பிராண்டனும் ஒருவர். ஒருமுறை இச் சிறுவனின் தாய் நள்ளிரவில் எழுகையில் சிறுவனின் அறையில் விளக்கு எரிந்துள்ளது. அப்போது அங்கு சென்று பார்க்கையில் சிறுவனுடன் ஒரு ஆண் இருந்துள்ளார். செயலி மூலம் சிறுவனுக்கு பழக்கமானதாக அந்த நபர் கூறிவிட்டு கூறி விட்டு தப்பியோடியுள்ளார்.

இதைஅடுத்து சிறுவனின் தாய் அவரது செல்போனை ஆராய்கையில் தமது மகன் தவறான பாதையில் செல்வதாக உணர்ந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

செயலியை முழுவதுமாக ஆராய்ந்தபோது அச் சிறுவனுக்கும் ப்ரண்டனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்தச் சிறுவன் செயலிக்குள் நுழைவதற்காக தனது வயதை 16 இற்கு பதிலாக 18 என பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள பிராண்டன் போலீசாரின் காவலில் உள்ளார். அவர் மீது ipc இன் சில பிரிவுகளில் மட்டுமல்லாது போக்ஸோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.