துபாயில் உயிரிழந்த ஸ்ரீதேவி குடும்பத்துக்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆறுதல் தெரிவித்தார். மும்பையில் உள்ள ஸ்ரீதேவி உறவினர் அனில் கபூர் இல்லத்துக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். 

தன் உறவினர் மோஹித் மார்வாவின் திருமணத்துக்காக மகள் குஷி மற்றும் கணவர் போனி கபூருடன் நடிகை ஸ்ரீதேவி துபாய் சென்றிந்தார். 

அப்போது மாரடைப்பின் காரணமாக திடீரென ஸ்ரீதேவி உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால்  இதையடுத்து வெளியான மருத்துவ பிரேத பரிசோதனை அறிக்கையில் நடிகை ஸ்ரீதேவி பாத்ரூமில் குளியல் நீர்த்தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும் ஸ்ரீதேவி ரத்தத்தில் மதுபானம் கலந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து ஸ்ரீதேவியின் உடல் துபாயில் இருந்து மும்பைக்கு இன்று கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

இந்நிலையில், அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக ரஜினி நேற்றே மும்பை சென்றுவிட்டார். அவரை தொடர்ந்து இன்று மாலை நடிகர் கமல் மும்பை விரைந்தார். 

தற்போது உயிரிழந்த ஸ்ரீதேவி குடும்பத்துக்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆறுதல் தெரிவித்தார். மும்பையில் உள்ள ஸ்ரீதேவி உறவினர் அனில் கபூர் இல்லத்துக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். 

மேலும் இறுதி சடங்கில் அவர் பங்கேற்பார். ஆனால் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கமாட்டேன் என ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார். 

இதனிடையே ஸ்ரீதேவியின் உடலை கொண்டுவருவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.