துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவ நடவடிக்கை... மத்திய அரசு தகவல்!!
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகின. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை மற்றும் குளிரால் மீட்பு பணி சவாலாக உள்ளது.
இதையும் படிங்க: ஊழலற்ற இந்தியா உருவாகிக் கொண்டு இருக்கிறது... மக்களவையில் பிரதமர் மோடி பெருமிதம்!!
இருந்த போதிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் 11,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இவ்விரு நாடுகளுக்கும் இந்தியா உள்ளிட்ட 65 நாடுகளில் இருந்து மீட்பு, நிவாரண பணிகளுக்காக குழுவினர் விரைந்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் விரைவில் நிலநடுக்கமா? துருக்கி பூகம்பத்தைக் கணித்த டச்சு ஆய்வாளர் சொல்வது என்ன?
இதனிடையே துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுக்குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலநடுக்கத்தால் பாதித்த 70க்கும் மேற்பட்ட இந்தியர்களிடம் இருந்து உதவி கேட்டு அழைப்பு வந்துள்ளது. சம்பந்தபட்ட அதிகாரிகளை கொண்டு தீர்வு காண முயற்சிகள் நடந்து வருகிறது. இந்தியர்கள் பாதிப்பு குறித்து இருநாட்டு தூதரகங்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.