"பீட்டா" மீது நடவடிக்‍கை எடுக்‍க எல்லா வகையிலும் முயற்சி… பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் சூளுரை!

பீட்டா மீது நடவடிக்‍கை எடுக்‍கும்படி நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன் என உத்தரகாண்ட் மாநில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஆர்வலுருமான தருண்விஜய் கூறியுள்ளார்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உத்தரகாண்ட் மாநில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தருண்விஜய் செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்தார்.

அப்போது, இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு குறித்து தெரிந்து கொள்ளாமல் செயல்படும் பீட்டா மீது நடவடிக்‍கை எடுக்‍கும்படி நாடாளுமன்றம் மட்டுமல்லாமல் எல்லா வகையிலும் முயற்சி மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார்.

தமிழர்கள் தாங்கள் வளர்க்‍கும் விலங்குகள்மீது அளப்பரிய அன்பு செலுத்துபவர்கள் என்றும், அவற்றை கொடுமைப்படுத்துபவர்கள் அல்ல என்றும் தெரிவித்த அவர், ஆயிரக்‍கணக்‍கான ஆண்டுகள் பழமை வாய்ந்த நமது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை சீர்குலைக்‍க யாருக்‍கும் உரிமையில்லை என்றும் குறிப்பிட்டார்.