niish kumar: bihar: amit shah: அமித் ஷா வந்தாலே கலகம் வரும், அமைதி கெடும்! : நிதிஷ் குமார் காட்டம்
பாஜக தலைவர் அமித் ஷா பீகாருக்கு வந்தாலே அமைதி கெடும், கலகம் வருவாகும், சகோதரத்துவம் பாதிக்கும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் காட்டமாகத் தெரிவித்தார்.
பாஜக தலைவர் அமித் ஷா பீகாருக்கு வந்தாலே அமைதி கெடும், கலகம் வருவாகும், சகோதரத்துவம் பாதிக்கும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் காட்டமாகத் தெரிவித்தார்.
பாட்னா நகரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்குப்பின் முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தையும் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவுடன் கடந்த சில நாட்களுக்கு முன் பேசினோம்.
எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சீராக, தொடர்ந்து பேசி வருகிறேன். அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து பாஜகவுக்கு எதிராகப் போரிட்டால், 2024ம் ஆண்டு தேர்தலில் பாஜக 50 இடங்களோடு சுருங்கிவிடும்.
நான் டெல்லி சென்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஒவ்வொரு தலைவரையும் சந்திக்க இருக்கிறேன். நாட்டில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் இணைக்கும் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறேன்.
மத்திய உள்துறை அமைச்சரும்,பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தசரா பண்டிகையின்போது சீமாஞ்சல் மண்டலத்துக்கு வருகிறார். அவர் வருவதற்கான காரணம் என்ன. பீகாரில் நிலவும் சகோதரத்துவத்தை குலைக்க வருகிறார், கலகம் விளைவிக்க வருகிறார், சமூகப் பதற்றத்தை உருவாக்க உள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினர்களிடம் நான் கேட்பது என்னவென்றால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு விழிப்புடன் இருங்கள். நமக்கு எதிராக பாஜகவினர் சதித்திட்டம் தீட்டலாம். அந்தத் சதித்திட்டத்தைக் கண்டுபிடித்து, அதை தீர்க்க முயல வேண்டும்.
2019ம் ஆண்டு தேர்தலில் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின்உதவியுடன் வென்றது. ஆனால், 2020ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் நாங்கள்தான் பாஜகவுக்கு உதவினோம். ஆனால், தங்கள் வாக்குகளை பிறக் கட்சிகளுக்கு மாற்றி, எங்களையும் பலவீனமாக்கிவிட்டனர் இதன்முடிவு 43 இடங்களில்தான் வென்றோம்.
நாட்டில் வகுப்புவாத மற்றும் வெறுப்பு அரசியலை பரப்ப பாஜக தொடங்கிவிட்டது. இப்போது போர்க்களத்தில் பாஜகவை எதிர்க்க வந்திருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் தெரியும், நான் எந்த செயலில் இறங்கினாலும் அதில் 100% அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, வெற்றிகரமாக நிறைவேற்றுவேன்
இவ்வாறு நிதிஷ் குமார் தெரிவித்தார்