பீகார் தலைநகர் பாட்னாவில் கங்கையாற்றில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

பாட்னாவில் மகர சங்கராந்தியையாெட்டி காெண்டாடப்பட்டு வருகிறது. சபல்பூரில் நடைபெற்ற பட்டம் விடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், நாட்டு படகு ஒன்றில் 40-க்கும் அதிகமானோர் கங்கையாற்றை கடக்க முயன்றுள்ளனா். அதிக சுமை காரணமாக திடீரென படகு கவிழ்ந்ததாக தெரிகிறது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்ததனா். மேலும் மருத்துவமனையில் 9 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், பீகாரில் மாேடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.