Asianet News TamilAsianet News Tamil

சினிமாவை மிஞ்சும் அளவில் இருவேறு இடங்களில் நடந்த கோர விபத்து! 8 பேர் பலி! நடந்தது என்ன?

ஆந்திராவில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடப்பா மாவட்டத்தில் நடந்த மற்றொரு விபத்தில், கார் லாரியுடன் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

Accident at two different places...8 people died  in Andhra Pradesh tvk
Author
First Published Aug 27, 2024, 9:30 AM IST | Last Updated Aug 27, 2024, 10:59 AM IST

ஆந்திர மாநிலம் கர்னூலில் இருந்து திருப்பதியை நோக்கி கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இந்த காரில் 8 பேர் பயணித்துள்ளனர். இந்த கார் கடப்பா மாவட்டம் சிந்தகுண்டா என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், நாகலட்சுமி(70), பகத் சிங்(35), அவரது ஒரு மாத குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு  மைதுகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: ரயில்கள் பகலை விட இரவில் வேகமாக இயக்கப்படுவது ஏன்? காரணம் இதுதான்!!

அதேபோல் கடப்பா மாவட்டம் ராயச்சோட்டி மலைப்பாதையில் சென்றுக்கொண்டிருந்த காரும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். 

இதையும் படிங்க: அக்கறையா இன்சூரன்ஸ் போட்டது இதுக்கு தானா? ரூ.25 லட்சத்திற்காக மனைவியை கொன்ற கணவன்

இதனையடுத்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு கடப்பா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவேறு இடங்களில் நடந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios