தேர்தல் 2023.. "சனாதனத்தை அவமதித்தால் ஏற்பட்ட நிலை இது" - காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக சாடிய வெங்கடேஷ் பிரசாத்!
Venkatesh Prasad Slams Congress : பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் திமுக அங்கம் வகிக்கிறது என சனாதன தர்மத்தின் கருத்து குறித்து அக்கட்சியின் தலைவர் ஜேபி நட்டா, INDIA அணியை கடுமையாக சாடியிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த சூழலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் "காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் மோசமான செயல்பாட்டிற்கு கிடைத்திருக்கும் பரிசு தான் இந்த தேர்தல் பின்னடைவு என்று மறைமுகமாக கூறியுள்ளார். காங்கிரஸின் இந்த நிலைக்கு அதன் கூட்டாளியான உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு தான் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் உத்தரகாண்ட் சுரங்க விபத்தை சுட்டிக்காட்டி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தலைமையையும் அவர் பாராட்டினார். "சனாதன தர்மத்தை அவமதித்தால் அதன் விளைவுகளை கண்டிப்பாக சந்திக்க நேரிடும்". "இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற பா.ஜ.க.வுக்கு வாழ்த்துகள்".
"பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவின் அற்புதமான தலைமை மற்றும் அரவணைப்பில் உள்ள கட்சி தொண்டர்களின் சிறப்பான பணிக்கு இது மற்றொரு சான்று" என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறினார். அமைச்சர் உதயநிதி "சனாதன தர்மம், சமூக நீதிக்கும் சமத்துவத்துக்கும் எதிரானது என்றும், அதை ஒழிக்க வேண்டும் என்றும்" கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பின்னர், சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் வியூகத்தின் ஒரு பகுதி என்று பாஜக கூறியது. மேலும் பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் திமுக அங்கம் வகிக்கிறது என அக்கட்சியின் தலைவர் ஜேபி நட்டா INDIA அணியை கடுமையாக சாடினார்.
ராஜஸ்தானில் ஆட்சியமைக்கும் பாஜக: அடுத்த முதல்வர் யார்?
"காங்கிரஸும் INDIA கூட்டணியும் தங்கள் பார்வையைத் தெளிவுபடுத்தி, எந்த மதத்திற்கு எதிராகவும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளைச் சொல்ல அரசியலமைப்பு உரிமை வழங்குகிறதா? இந்தியக் கூட்டணி உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு விதிகள் தெரியாதா" என்று நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.