Asianet News TamilAsianet News Tamil

பல ஆதார் அட்டைகளில் ஒரே நபரின் படம்! ஆதார் ஆணையத்துக்கு ஷாக் கொடுத்த டெல்லி போலீஸ்

ஆதார் அடையாள அட்டை வைத்திருக்கும் மக்களின் விவரங்களைப் பாதுகாப்பதில் பல ஓட்டைகள் இருப்பதாக டெல்லி காவல்துறை விளக்கியுள்ளது.

Aadhaar has many loopholes Delhi Police explains it to UIDAI
Author
First Published Mar 20, 2023, 6:09 PM IST

டெல்லி காவல்துறை வங்கி முறைகேடு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரிக்கும்போது ஆதார் அட்டையின் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகளைக் கண்டறிந்துள்ளனர். ஆதார் அடையாள அட்டையைத் தயாரிக்கும்போது அந்தந்த நபரின் முகம் மற்றும் பயோமெட்ரிக் பதிவுகள் பொருந்துகின்றவா என்பதை ஆதார் ஆணையம் கவனிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. தங்கள் விசாரணையில் தெரியவந்த விவரங்களை டெல்லி காவல்துறை ஆதார் ஆணையத்திற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.

"பல ஆதார் அட்டைகளில் ஒரே நபரின் புகைப்படம் இருந்தாலும் அவை வெவ்வேறு நபர்களின் பெயரில் உள்ளன. வங்கியில் உள்ள தரவுகளைக் கொண்டு பெயர்களை சரிபார்த்த பிறகு 12 வங்கிக் கணக்குகள் டிஜிட்டல் முறையில் தொடங்கப்பட்டவை என்று அறிந்தோம். இதன் மூலம், ஒருவரே பல ஆதார் அட்டைகளை உருவாக்குவது சாத்தியம் என்பது தெளிவாகிறது. ஒவ்வொரு அட்டையிலும் கைரேகைகள் வேறுபட்டாலும் புகைப்படம் ஒரே போல இருக்கும்" என்று டெல்லி போலீசார் கடிதத்தில் கூறியுள்ளனர்.

ரயில் நிலைய டிவியில் பட்டப்பகலில் ஆபாச வீடியோ ஒளிபரப்பானதால் அதிர்ச்சி!

Aadhaar has many loopholes Delhi Police explains it to UIDAI

இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் சான்றுகளை பயன்படுத்தியுள்ளதும் டெல்லி போலீசார் நடத்திய விசாரணை மூலம் தெரிகிறது. அவர்கள் அந்த முகவர்களின் சிலிக்கான் கைரேகைகள், ஐரிஸ் ஸ்கேன் போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசு அலுவலகங்களில் தான் பணிபுரிய வேண்டும் என ஆதார் ஆணையம் விதிமுறை வைத்திருக்கிறது. அவர்களின் செயல்பாடுகள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும். இதனைத் தவிர்க்க மோசடியில் ஈடுபட்டவர்கள் சில நாட்களுக்கு ஒருமுறை தாங்கள் பயன்படுத்தும் லேப்டாப்பை நியமிக்கப்பட்ட அரசு அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை இப்படிச் செய்வதால் ஜிபிஎஸ் கண்காணிப்பில் அரசு அலுவலகம் இருக்கும் இடம் காட்டப்படும். இதன் மூலம் மோசடிக்காரர்கள் ஜிபிஎஸ் பாதுகாப்பை முறியடித்துள்ளனர்.

என்னது... தகுதி உள்ளவங்களுக்கு மட்டுமா? அனைத்து மகளிருக்கும் ரூ.29,000 கொடுங்க! அண்ணாமலை அதிரடி

Aadhaar has many loopholes Delhi Police explains it to UIDAI

இதேபோல, சிலிக்கான் கைரேகைக்கும் ஒரு மனிதர் நேரடியாகப் பதிவு செய்யும் கைரேகைக்கும் வித்தியாசம் அறிய முடியாமல் இருப்பது ஆதார் அமைப்பில் உள்ள மற்றொரு குறைபாடாக டெல்லி போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் மோசடி செய்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் இருந்து சிலிக்கான் கைரேகைகளைப் பெற்று பயன்படுத்துகின்றனர். ஐரிஸ் ஸ்கேன் என்பது ஒரு பயோமெட்ரிக் பாதுகாப்பு அம்சமாகும். இந்த ஐரிஸ் ஸ்கேன் நகல் பயன்படுத்தப்படுவதையும் ஆதார் அமைப்பால் கண்டறிய முடியவில்லை. மோசடி செய்வோர் ஐரிஸ் ஸ்கேனின் கலர் நகலை பயன்படுத்துகிறார்கள் என்றும் டெல்லி போலீஸ் சொல்கிறது.

டெல்லி போலீசார் ஆதாரில் உள்ள கோளாறுகள் பற்றி ஆதார் ஆணையத்தின் அதிகாரிகளுடன் உரையாடிபோது மற்றொரு முக்கியக் குறைபாடும் தெரியவந்துள்ளது. ஆதார் அமைப்பு ஒரு நபரின் பத்து விரல் கைரேகைகளையும் வெவ்வேறு தனித்தனி அடையாளங்களாகக் கருதாமல், ஒரே அடையாளமாகக் கருதுகிறது. இவை போன்ற குறைகளை எல்லாம் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் பல போலி ஆதார் அடையாள அட்டைகளை உருவாக்கியுள்ளனர்.

வசூல் வேட்டை நடந்திய டாஸ்மாக்! அடுத்த டார்கெட் 50 ஆயிரம் கோடி!

Follow Us:
Download App:
  • android
  • ios