ஆதார் எண்ணை செல்போனுடன் இணைக்காத சிம் கார்டுகள் பிப்ரவரி 2018 க்குப் பின் கட் ஆகிவிடும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது

அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, பொதுமக்களின் வங்கி கணக்கு, எரிவாயு இணைப்பு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், செல்போன் எண்ணையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு  ஏற்கனவே அறிவுறுத்தியிருந்ததது.

இது தொடர்பாக அனைத்து செல்போன்களுக்கும் அந்தந்த நிறுவனங்கள் ஏற்கனவே மெஸேஜ் அனுப்பி வருகின்றன. ஆயிரக்கணக்கோனோர் தங்கள் செல்போனுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.இந்நிலையில் செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்காத சிம் கார்டுகள் வரும் 2018-ம் ஆண்டு பிப்ரவரிக்கு பின் கட்  செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், 2018ம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின் படி சிம் கார்டுகள் செயலிழப்பு செய்யப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.