கேரளாவில் இந்து பெண்ணை முஸ்லிம் மதத்திற்கு மாற்றி திருமணம் செய்த (லவ் ஜிஹாத்) விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து தேசிய புலனாய்வுத்துறை (என்.ஐ.ஏ.) வழக்கு பதிவு செய்துள்ளது.

கேரளாவில் முஸ்லிம் ஆண் ஒருவர் இந்து பெண்ணை மதம் மாறச்செய்து பின்னர் திருமணம் செய்துகொண்டது தொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டத,.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், இந்த திருமணத்தில், காதல் என்ற பெயரில் மதம் மாற்றும் திட்டமான ‘லவ் ஜிஹாத்’ என்கிற பிரச்சினை இருக்குமோ என சந்தேகம் எழுப்பியது.

‘இதனையடுத்து,அந்த திருமணத்தை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து அந்த முஸ்லடிம் கணவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீல திமிங்கலம் என்கிற ஆபத்தான இணையதள விளையாட்டைப் போல இந்து பெண்ணை மதம் மாறச்செய்து திருமணம் செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டனர்.

குறிப்பாக கேரளாவில் இவ்வாறு நடைபெறுவது, இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல. அங்கு லவ் ஜிஹாத் திருமணங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவதாக கருதப்படுகிறது என்றும் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து , இந்த மதமாற்ற திருமணம் குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் மேற்பார்வையில் தேசிய புலனாய்வுக் குழு (என்.ஐ.ஏ.)விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து கேரள மாநிலத்தில் மல்லாபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிந்தால்மன்னா காவல் நிலையத்தில் போலீசார் செய்திருந்த வழக்குப்பதிவை, தேசிய புலனாய்வு அமைப்பு மீண்டும் மறுவழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஒரு முடிவுக்கு வரும் முன்பாக தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் கேரள போலீசாரின் அறிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டியுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.