மது போதையில் பெண் ஒருவர், போலீசாரிடம் வாக்குவாதம் செய்வுதும், மீடியாவினரை கல்லால் விரட்டி விரட்டி தாக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பபவம் ஐதராபாத், ஹூப்ளியில் நடந்துள்ளது. ஹூப்ளியில் பல திரைப்பட ஸ்டுடியோக்கள் உள்ளன. சில முன்னணி நடிகர்களின் வீடுகளும் இங்குள்ளன. இந்த பகுதியில் போலீசார நேற்று இரவு வாகன சோதனை நடத்தி வந்தனர்.

அப்போது, அந்த வகுதியில் கார் ஒன்று வேகமாக வந்தது. அதனை போலீசார் நிறுத்த சொல்லியுள்ளனர். காரை ஓட்டி வந்தவர் மிகுந்த போதையில் இருந்தது தெரியவந்துள்ளது. அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அப்போது, அந்த காரில் இருந்து இறங்கிய மாடர்ன் பெண் ஒருவர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரும் மது போதையில் இருந்ததால் போலீசார் அந்த பெண்ணை எச்சரித்தனர். ஆனால், அந்த பெண் தொடர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள், இதனை வீடியோ பதிவு செய்தனர்.

இதனைப் பார்த்த அந்த பெண், ரோட்டில் கிடந்த கல்லை எடுத்து மீடியாவினரை நோக்கி எறிந்தார். பிறகு விரட்டி விரட்டி எறியத் தொடங்கினார். இதையடுத்து, அந்த பெண்ணை போலீசார் எச்சரித்தனர். 

போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண் பற்றி தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பெண் யாரென்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.