ரூ.3,100 கடனை செலுத்தாத காய்கறி வியாபாரியை நிர்வாண ஊர்வலம் அழைத்து சென்ற கொடுமை.. அதிர்ச்சி வீடியோ

கடனை திருப்பி செலுத்தாததால் காய்கறி வியாபாரி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

A vegetable vendor was paraded naked for non-payment of a loan of Rs.3,100.. Shocking video Rya

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் 3,100 ரூபாய் கடனை செலுத்தாததால் காய்கறி வியாபாரியை சரமாரியாக அடித்து, அவரை சந்தையில் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக  இருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை வருகிறது. அதில் அந்த வியாபாரியை வெளியேறும்படி கட்டாயப்படுத்துவதை பார்க்க முடிகிறது. 

மத்திய நொய்டாவின் கூடுதல் டிசிபி ராஜீவ் தீட்சித் பேசிய போது “ பாதிக்கப்பட்டவர் உத்தரபிரதேசத்தின் மைன்பூரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அவர் ஒரு மாதத்திற்கு முன்பு 5,600 ரூபாய் கடன் வாங்கி, தனக்குச் சொந்தமாக பூண்டு வண்டி வைத்துள்ளார். செக்டார் 88ல் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் சந்தையில் வேலை செய்து வருகிறார். கடந்த திங்கள்கிழமை அந்த வியாபாரி, தான் வாங்கிய ரூ.5600 கடனில் ரூ. 2,500 ஐ திருப்பிச் செலுத்தச் சென்றார், மீதமுள்ள தொகையை இறுதியில் திருப்பித் தருவதாக கமிஷன் ஏஜெண்டிடம் கோரினார்.

 

இருப்பினும், கமிஷன் முகவர் தனது கணக்காளரையும் இரண்டு தொழிலாளர்களையும் கடைக்கு அழைத்தார். அவர்கள் தன்னை கடைக்குள் பிடித்து, தன் ஆடைகளைக் களைந்து, தடிகளால் என்னைத் தாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்றதாக அவர் புகார் அளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்த குறைந்தபட்ச வயது நிர்ணயம் செய்யுங்கள்: உயர் நீதிமன்றம் பரிந்துரை

இதுதொடர்பாக திங்கள்கிழமையே இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாக கூடுதல் டிசிபி தீட்சித் தெரிவித்தார். மேலும் “முக்கிய குற்றவாளி சுந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர் பகந்தாஸ் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய தண்டனைச் சட்டத்தின் 323, 342, 357, 504, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் உள்ளூர் 2 ஆம் கட்ட காவல் நிலையத்தில் (IPC) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66E பிரிவின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios