Rahul Bharat Jodo Yatra: பாரத் ஜோடோ நடைபயணத்தில் தஞ்சை காங்கிரஸ் தொண்டர் லாரி மோதி பலி: ராகுல் காந்தி இரங்கல்
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ நடைபயணத்தின்போது, லாரி மோதி, தமிழகத்தின் தஞ்சையைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் பலியானார்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ நடைபயணத்தின்போது, லாரி மோதி, தமிழகத்தின் தஞ்சையைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் பலியானார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ நடைபயணத்தை தொடங்கியுள்ளார். தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் நடைபயணத்தை முடித்த ராகுல் காந்தி, தற்போது மகாராஷ்டிரா மாநிலத்துக்குள் 7ம் தேதி முதல் நடந்து வருகிறார்.
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்கம்: பினராயி அரசு அதிரடி
இந்நிலையில் நான்தேத் நகரில் நேற்று இரவு நடந்த ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்றுவிட்டு, இரவு தங்குவதற்காக, ஆர்தர்பூர் பகுதியில் உள்ள பிம்பால்கான் மகாதேவ் கிராமத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் வந்தனர். அப்போது நேற்று இரவு 8.30 மணி அளவில் வந்தபோது, சாலையில் சென்ற காங்கிரஸ் தொண்டர்கள் மீது மோதியது.
இதில் காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் பலத்த காயமடைந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார், ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உயிரிழந்த காங்கிரஸ் தொண்டர் தஞ்சையைச் சேர்ந்த கணேசன் பொன்ராம்(வயது62) என்பதும் மற்றொருவர் பெயர் சாயுல்(வயது30) என்பதும் தெரியவந்தது. இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் பாஜக தொண்டர்களைப் பார்த்தும் காரை நிறுத்தி கையசைத்த பிரதமர் மோடி
இது குறித்து ஆர்தர் போலீஸ் நிலைய அதிகாரிகள் கூறுகையில் “ ராகுல்காந்தியின் பேரணிக்குச் சென்றுவிட்டு, காங்கிரஸ் தொண்டர்கள் இரவுநேர முகாமுக்கு திரும்புகையில், ஆர்தர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பிம்பால்கான் மகாதேவ் கிராமம் அருகே தொண்டர்கள் மீது லாரி மோதியது. இதில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் சிறு காயத்துடன் உயிர்பிழந்தார். உயிரிழந்தவர் பெயர் கணேசன் பொன்ராம்” என்று தெரிவித்தனர்.
காங்கிரஸ் தொண்டர்கள் மீது லாரி மோதியதில், ஒருவர் உயிரிழந்தது குறித்து அறிந்த ராகுல் காந்தி அதிர்ச்சியும் வேதனையும் அடைந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு 3 மாதங்களுக்குப்பின் ஜாமீன்! சிறப்பு நீதிமன்றம் வழங்கியது
ராகுல் காந்தி தனது பேஸ்புக் பதிவில் “ காங்கிரஸ் தொண்டரும், பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றிருந்த கணேசன்ஜி மறைவால் ஆழ்ந்த வேதனையடைகிறேன். கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு யாத்திரையிலும் கணேசன் பங்கேற்றுள்ளார், தீவிரமான காங்கிரஸ் தொண்டர். பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றிருந்த உண்மையான தொண்டரை கட்சி இழந்துவிட்டது. அவரின் குடும்பத்தினர், நலம்விரும்பிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். கணேசனின் தேசத்துக்கான அர்ப்பணிப்பு கட்சிக்காண சேவை, அனைவருக்கும் ஊக்கமாக அமையும்” எனத் தெரிவித்தார்
பாரத் ஜோடோ யாத்திரை, இன்றுடன் 69வது நாளை எட்டியுள்ளது.நான்தேத் மாவட்டத்திலிருந்து அடுத்ததாக, ஹிங்கோலி மாவட்டத்துக்குள் ராகுல் காந்தி யாத்திரை செல்ல உள்ளது. இந்த யாத்திரையில் மகாராஷ்டிராவில் 15 சட்டப்பேரவை மற்றும் 6 மக்களவைத் தொகுதிகளைக் கடந்து ராகுல் காந்தி பயணிக்கிறார். அடுத்ததாக வரும் 20ம் தேதி ராகுல் காந்தி யாத்திரை மத்தியப் பிரதேச மாநிலத்துக்குள் செல்கிறது.