a snake came out from a pwersons pant in bangalore
பாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் ..! பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...!
கர்நாடக மாநிலத்தில் உள்ள கதக் மாவட்டம் நரகுந்த் நகரை சேர்ந்தவர் வீரேஷ். இவர் தனது வீட்டிலிருந்து அருகில் உள்ள மார்கெட்டிற்கு சென்று காய் கறிகளை வாங்கி வர , தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார்
இருசக்கர வாகனத்தில் மெதுவாக சென்ற போது, தன் காலில் ஏதோ ஒன்று சில்லெனே ஊறுவது போல தோன்றி உள்ளது..ஆனால் காய் கறிகளில் உள்ள தண்ணீர் தான், தன் பேண்டில் நனைந்து உள்ளது என உணர்ந்து உள்ளார்.
பின்னர் தொடர்ந்து அதே வண்டியில் சிறிது தூரம் சென்றவர்,மீண்டும் தன் காலில் ஏதோ ஒன்று ஊர்வதை உணர்ந்து உள்ளார்.
அப்போது தீடிரென தன் காலை பார்க்கும் போது, ஒரு வால் பகுதி பேண்டுக்குள் இருந்து காலின் அருகே தெரிந்து உள்ளது..
பதறி போன அவர், உடனடியாக தன் பேண்டை கழற்றி எறிந்துள்ளார். அதிலிருந்து இரண்டு அடி உள்ள பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளது...
அதை பார்த்து அதிர்ந்து போன வீரேஷ் இது குறித்து தெரிவிக்கும் போது," நான் சொந்தமாக உணவகம் நடத்தி வருகிறேன்..என்னுடைய இருசக்கர வாகனத்தை வெளியில் விடுவது வழக்கம்...இரவு நேரத்தில் அங்கிருந்த பாம்பு வண்டி என்ஜினில் ஏறி இருக்க வாய்ப்பு உள்ளது...வண்டி ஸ்டார்ட் செய்த உடன், சூடு தாங்காமல் அது வெளியில் வந்து என்னுடைய பேண்டில் நுழைந்திருக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளார்..
எது எப்படியோ...நான் உடனடியாக என் ஆடையை கழட்டி எறிந்துவிட்டேன்.. இல்லையென்றால் உயிர் பிழைத்திருப்பதே அதிசயம் தான் என பயத்துடன் பெருமூச்சி விட்டுள்ளார்.
இந்த சம்பவம் தான் டாக் ஆப் தி டவுனாக உள்ளது.
