இந்தியா Vs பாகிஸ்தான் இடையே ரகசிய போரா?! - காஷ்மீரில் 600 பாக்., கமாண்டோக்கள் ஊடுருவியது உண்மையா?
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 600 SSG கமாண்டோக்கள், காஷ்மீருக்குள் ஊடுருவியுள்ளதாக முன்னாள் DGP ஷேஸ் பால் வைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்திய ராணுவத்தினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான் இடையே ரகசிய போர் மூண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அம்ஜத் அயுப்மிர்சா தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார், அதில், பாக்., ராணுவத்தின் சிறப்பு பயிற்சி குழு (SSG) அதிகாரி ரெஹ்மானி இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், SSG படையின் 600 கமாண்டோக்கள் காஷ்மீரின் குப்வாரா மற்றும் பல பகுதிகள் வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவியுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர்களுக்கு உள்ளூர் ஜிகாதி குழுவினர் உதவி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பூஞ்ச், உரி, ரஜோரி உள்ளிட்ட பகுதிகளில் தலா 150 பேர் வீதம் 3 குழுக்களாக பிரிந்து காஷ்மீருக்குள் ஊடுருவியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
SSG குழுவின் லெப்டினன்ட் காலினல் பொறுப்பில் உள்ள ஷாகித் சலீம் ஜன்ஜூவா, காஷ்மீரில் தற்போது ஊடுருவியுள்ளார். இவர், இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் திட்டங்களை தயாரித்து வருகிறார். பாக்., SSG கமாண்டோக்கள் இந்திய ராணுவத்தின் 15 கார்ப்ஸ் பிரிவினருடன் மோதுவதே நோக்கமாக உள்ளதாக அறியப்படுகிறது.
காஷ்மீருக்குள் ஊடுருவியுள்ள SSG குழுவினர் (Occupied Kashmir) ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தயார் நிலையில் இருப்பதாக அறியப்படுகிறது. அவர்கள், சுமைதூக்கும் தொழிலாளிகள் போலும், சாமானிய மக்கள் போன்றும் ஊடுருவி மக்களோடு மக்களாக கலந்துள்ளனர். தாக்குதலுக்கும் தயாராகி வருவதாகவும் அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.
கனமழையால் ரயில் ரத்து.. டிக்கெட் பணம் திரும்ப கிடைக்குமா? ரயில்வேயின் இந்த விதி தெரியுமா?
இதனிடையே, காஷ்மீர் மாநில முன்னாள் டிஜிபி ஷேஸ் பால் வைத்தும் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் இதே கருத்தை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து, இந்திய ராணுவத்தினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.