சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட கைதி ஒருவர் தனது பிறந்த நாளை துப்பாக்கி வடிவிலான கேக் வெட்டி கொண்டாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கைதாகி பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
அங்கு அனைத்து கைதிகளை போன்று தான் சசிகலாவிற்கும் அறைகள், உணவுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அடிக்கடி அமைச்சர்கள் சென்று பார்ப்பதற்கு கூட சிறைத்துறை கட்டுப்பாடுகள் விதித்தன. 
ஆனால் சில நாட்களில் சசிகலா பற்றிய செய்திகள் இல்லாமல் ஒட்டுமொத்த மீடியாவும் வேறு செய்திகளை நோக்கி நகர ஆரம்பித்தது. 
இதைதொடர்ந்து தற்போது புயலுக்கு முன் அமைதி என்பது போல சசிகலா பற்றிய சிறைத்துறை டிஐஜி ரூபாவின் குற்றசாட்டு பெரும் புயலை உண்டாக்கியுள்ளது. 
அதாவது சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக சிறைத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகவும் அடுக்கடுக்காக குண்டுகளை தூக்கி போட்டார். 
இதனால் சசிகலா விவகாரம் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதைதொடர்ந்து பெங்களூர் சிறையில் இருந்து அடுத்தடுத்து பல முறைகேடுகள் மீடியாவின் கையில் சிக்கி வருகின்றன. 
சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்ட தனியறைகள், அவர் காவலர் உதவியுடன் வெளியே ஷாப்பிங் சென்று வருவது என பல்வேறு புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாக பரவி வருகிறது. 
இந்நிலையில்,  சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட கைதி ஒருவர் தனது பிறந்த நாளை துப்பாக்கி வடிவிலான கேக் வெட்டி கொண்டாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கியாத்தே சேட்டன் என்ற கொலை கைதி, சிறைக்குள் துப்பாக்கி வடிவ பிரமாண்ட கேக்கை வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதோடு அந்த கேக்கை சிறை அதிகாரிகளே ஏற்பாடு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது வெளியில் இருப்பவர்களை விட சிறைக்குள்ளே சகல வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படுகின்றன என்ற கூற்றை நிரூபித்துள்ளது பரப்பன அக்ரஹார சிறை…