Asianet News TamilAsianet News Tamil

கடனை திருப்பி செலுத்தாதவர்களின் படத்தை பத்திரிகைகளில் வெளியிட்டு அசிங்கப்படுத்த வேண்டும்! வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு 

A photo of the repayment will be published in the press!
A photo of the repayment will be published in the press!
Author
First Published Mar 14, 2018, 1:24 PM IST


வங்கிக் கடன் பெற்றவர்கள், திறன் இருந்தும் கடனை செலுத்தாமல் இருப்பவர்களின் புகைப்படம் மற்றும் விவரங்களை பத்திரிகைகளில் வெளியிட்டு அசிங்கப்படுத்த வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வங்கிகளில் கடன் பெற்றவர்கள், வேண்டுமென்றே பணத்தை திரும்ப செலுத்தாதவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

அப்படி வங்கிக் கடனை திரும்ப செலுத்தாதவர்களின் புகைப்படங்களையும், மற்ற விவரங்களையும் பத்திரிகைகளில் வெளியிட்டு அசிங்கப்படுத்துமாறு, அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வங்கியின் இயக்குநர்கள் குழு ஒப்புதலுடன் இதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு வங்கிகளுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

கடனை திருப்ப செலுத்தும் திறன் இருந்தும், செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டி விட்டதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. அது மட்டுமல்லாது, 1 லட்சத்து 10 ஆயிரத்து 50 கோடி ரூபாய் வாரா கடன் உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios