கொரோனா தொற்று காரணமாக, இந்தியாவின் அணைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளதால், பொது மக்களும், உடல் நலமின்றி அவதிப்பட்டு பட்டுவரும், பெரியவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அந்த வகையில் கேரள மாநிலம் புனலூரை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் உடலனமின்றி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீண்டும் உடல் நலம் தெரியதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.அந்த முதியவரை அழைத்து செல்ல, அவருடைய மகன், ஆட்டோ, அழைத்து வந்திருந்தும்... மருத்துவமனை வளாகத்திற்குள் ஆட்டோவை உள்ளே விட போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். 1 கிலோ மீட்டர் முன்பே ஆட்டோவை நிறுத்திவிட்டனர்.

எனவே, தன்னுடைய தந்தையை... அவருடைய மகன் குழந்தை போல் 1 கிலோ மீட்டர் தூரம் தோளில் தூக்கி வந்து ஆட்டோவில் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அவர் பின்னல் அவருடைய தாயாரும் வேகமாக ஓடுகிறார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.மக்களின் பாதுகாப்பு கருதி, போலீசார் சில விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து வருவது நல்லது என்றாலும், நோயாளிகள், மற்றும் முதியவர்களுக்காகவாது, தங்களுடைய விதிமுறைகளை சற்று போலீசார் தளர்த்த வேண்டும் என்பதே இந்த வீடியோவை பார்த்த பலருடைய கருத்தாகவும் உள்ளது.

நெஞ்சை உருகவைக்கும் அந்த வீடியோ இதோ: