கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குழந்தைக்கு டீ கொடுத்த பின்னர் குழந்தை இறந்துவிட்டதாக தாய் தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒன்றரை வயது குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் சிம்ரால் என்ற பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குழந்தைக்கு டீ கொடுத்த பின்னர் குழந்தை இறந்துவிட்டதாக தாய் தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒன்றரை வயது குழந்தைக்கு ஏன் டீ கொடுத்தார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சிம்ரால் காவல்நிலைய அதிகாரி மன்சாராம் பாகேல் இதுகுறித்து பேசிய போது “ உயிரிழந்த குழந்தையின் தாய், சிம்ரோலில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். குழந்தையின் தந்தையில் தற்போது ஜெயிலில் இருப்பதால் அவர் தனது குழந்தையும் தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டீ கொடுத்த பிறகு குழந்தையின் மூச்சு நின்றுவிட்டதாக அவரின் தாய் கூறியுள்ளார். 22 கி.மீ தொலைவில் இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.” என்று தெரிவித்தார். குழந்தை இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதால், மரணத்திற்கான காரணம் குறித்து கருத்து சொல்ல முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ராஜ்ய சபாவுக்கு வந்த மன்மோகன் சிங்... பாராட்டும் ஆம் ஆத்மி... வெட்கக்கேடு என விமர்சிக்கும் பாஜக!