“தமிழ் கலாச்சாரம், மொழியை பாதுகாத்த மாபெரும் தலைவர்” கருணாநிதிக்கு ராகுல்காந்தி புகழாரம்..
தமிழ் கலாச்சாரம், மொழியை பாதுகாத்த மாபெரும் தலைவர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்வதாக ராகுல்காந்தி புகழாரம் சூட்டி உள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர். சென்னை மெரினாவில் அவரின் நினைவிடத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதே போல் டெல்லியில் அண்னா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு திமுக நாடாளுமன்ரா உறுப்பினர்கள் டி.ஆர் பாலு, திருச்சி சிவா, பி. வில்சன், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாலர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
கண்ணொளித் திட்டம் முதல் காப்பீட்டுத் திட்டம் வரை: கலைஞர் ஆட்சியில் கொண்டுவந்த மருத்துவத் திட்டங்கள்!
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி “ முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை சந்தித்ததையும், அவருடன் இணைந்து செயல்பட்டதையும் நினைவு கூர்கிறேன். அவரை சந்தித்து, பல நேரங்களில் அவரின் ஆலோசனைகளை கேட்டு செயல்பட்டு, அதன் மூலம் பயனடைந்துள்ளோம். இந்த நாளில் திமுகவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
நீங்கள் கனவு கண்ட கம்பீரத் தமிழ்நாட்டை நாங்கள் உருவாக்கிக் காட்டிவருகிறோம்.. முதல்வர் ஸ்டாலின்!
இதை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோரும் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி “தமிழகத்தின் மாபெரும் தலைவர் - தமிழ் மக்களின் கலாசாரம், மொழி ஆகியவற்றைக் காத்தவர். இன்று அவருக்கு மரியாதை செலுத்துவதை எனக்குக் கிடைத்த பெருமையாக கருதுகிறேன்" என்று தெரிவித்தார்.