ஆற்றில் குதித்து இறந்துபோன தனது உரிமையாளருக்காக காத்திருந்த நாய்.. நெகிழ்ச்சி சம்பவம்..
ஆற்றில் குதித்து உயிரிழந்த தனது உரிமையாளருக்கு அந்த நாய் காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணின் காலணி ஒன்றின் அருகே பாலத்தில் அமர்ந்திருந்த நாய், அங்கிருந்து நகர மறுத்தது. அந்த நாய் பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது அந்த நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆம். ஆற்றில் குதித்து உயிரிழந்த தனது உரிமையாளருக்கு அந்த நாய் காத்திருந்தது பின்னர் தான் தெரியவந்து. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு எடுர்லங்கா - ஏனாம் பாலத்தில் கோதாவரி ஆற்றில் குதித்து நாயின் உரிமையாளரான பெண் ஒருவர் உயிரிழந்துவிட்டார். ஆனால் அந்த நாய்க்கு அது தெரியவில்லை. தனது உரிமையாளர் திரும்பி வருவதற்காக அவளுடைய நாய் காத்திருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணையத்தில் வெளியான வீடியோவில், அந்த பெண்ணின் காலணிகளுக்கு அருகில் நாய் காத்திருப்பதை பார்க்க முடிகிறது. அந்த இடத்தில் நீண்ட நேரமாக நாய் குரைப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு பெண்ணின் உடலை மீட்டனர். இந்த நிலையில், ட்விட்டரில் அந்த நாயின் வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ட்விட்டர் பயனர் ஒருவர், ஒரு நாயின் அன்பு எவ்வளவு விலைமதிப்பற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
உரிமையாளர் உயிரிழந்தது தெரியாமல், அவர் திரும்பி வருவதற்காக நாய் காத்திருப்பதைப் பார்ப்பது 'இதயத்தை உலுக்குகிறது' என்று பல பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஒருவேளை அந்த நாய் அவருக்காக காத்திருக்கும் என்று தெரிந்திருந்தால், அப்பெண் தனது முடிவை மாற்றி இருப்பார் என்று பயனர் ஒருவர் பதிவிட்டுள்ள