பிரதமர் மோடியின் தாய் எடைக்கு நிகராக..60 கிலோ தங்கம் தானமாக கொடுத்து அசத்திய தொழிலதிபர் !!

வாரணாசி, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நன்கொடையாக 60 கிலோ தங்கம் கொடுத்து இருக்கிறார் தொழிலதிபர் ஒருவர்.

A businessman has donated 60 kg of gold to the Kasi Vishwanathar Temple in Varanasi

பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் காசி விஸ்வநாதர் கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இப்போது அந்த கோவிழை மேலும், அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது. கருவறையின் உள் சுவர்கள் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. 

பிரதமர் மோடியின் தாயாரின் எடைக்கு நிகரான தங்கம் கோயிலின் உள் சுவர்களை அழகுபடுத்தப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 60 கிலோ தங்கத்தை காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நன்கொடையாக அளித்ததாக கூறப்படுகிறது.

A businessman has donated 60 kg of gold to the Kasi Vishwanathar Temple in Varanasi

அதனை பிரதமர் மோடியின் தயாரான ஹீராபென் அவர்களின் எடைக்கு ஏற்ப இதனை கோவிலுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும், தான் ஒரு தீவிர மோடி ரசிகர் என்றும் கூறப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில், 37 கிலோ உள் வளாகத்தை (கருவறையில்) அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது, மீதமுள்ள 23 கிலோ தங்கம் பிரதான கட்டமைப்பின் தங்க குவிமாடத்தின் கீழ் பகுதியை அலங்கரிக்க பயன்படுத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.

A businessman has donated 60 kg of gold to the Kasi Vishwanathar Temple in Varanasi

கடந்த ஞாயிற்றுக்கிழமை வாரணாசி மக்களவைத் தொகுதிக்கு பிரதமர் மோடி வந்த போது,  உள் சுவர்களில் தங்க முலாம் பூசப்பட்டது மக்களின் கவனத்தை ஈர்த்தது. கருவறையின் உள் சுவர்களில் மஞ்சள் உலோக முலாம் பூசப்பட்ட செய்தியை வாரணாசி கோட்ட ஆணையர் உறுதி  செய்திருக்கிறார்.  18ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு இந்த கோயிலில் நடைபெறும் இரண்டாவது பெரிய தங்கப் பணி இதுவாகும்.

A businessman has donated 60 kg of gold to the Kasi Vishwanathar Temple in Varanasi

1977 ஆம் ஆண்டு இந்தூரின் ஹோல்கர் ராணி மகாராணி அஹில்யாபாயால் முகலாயர்களால் அழிக்கப்பட்ட இந்த ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது. மகாராஜா ரஞ்சித் சிங் ஒரு டன் தங்கத்தை நன்கொடையாக வழங்கினார், இது கோவிலின் 2 குவிமாடங்களை மறைக்க பயன்படுத்தப்பட்டது. தற்போது 900 கோடி செலவில் இக்கோவிலின் பணிகள் முடிக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios