A 3-Year-Old Climbed Into The Washing Machine And Died
ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் 3 மாத பெண் குழந்தையை கொலை செய்து வாஷிங் மெஷினுக்குள் சுருட்டி வைத்த கொடூர தாய் கைது செய்யப்பட்டார்.
பெண் குழந்தை
உ.பி. மாநிலம் காசியாபாத் பாட்லா நகரை சேர்ந்தவர் ஆர்த்தி ( வயது 22). கடந்த 3 மாதங்களுக்கு முன் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
ஆனால் தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்ற கோபத்திலும் மன வெறுப்பிலும் ஆர்த்தி இருந்து வந்தார். மேலும் அவரது குடும்பத்தினரும் ஆண் குழந்தைதான் வேண்டும் என ஆர்த்தியை மிரட்டி வந்துள்ளனர்.
வாஷிங் மெஷினுக்குள்..
இதனால் மன உளைச்சலில் இருந்த ஆர்த்தி, திடீரென குழந்தையை தலையணையால் தாக்கி கொலை செய்தார். பின்னர் குழந்தையின் உடலை சுருட்டி வாஷிங் மெஷினுக்குள் வைத்து மூடிவிட்டார்.
அதன் பின்னர் குழந்தையை யாரோ கடத்தி விட்டதாக ஆர்த்தி போலிசில் புகார் கொடுத்து நாடகம் ஆடி இருக்கிறார். போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் ஆர்த்திதான் குழந்தையை கொன்று வாஷிங் மெஷினுக்குள் போட்டது தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
