பெண்களின் சக்தி இந்தியாவின் திறனுக்கு சாட்சி: மன் கீ பாத் உரையில் பிரதமர் பாராட்டு
மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி லோகோ பைலட் சுரேகா யாதவ், ஆஸ்கர் விருது வென்ற தமிழ் ஆவணப்படத்தை இயக்கிய கார்த்திகி உள்ளிட்ட பெண் சாதனையாளர்களைப் பாராட்டியுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் மன் கீ பாத் நிகழ்ச்சி 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விஜயதசமி அன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷன் ஆகியவற்றில் இந்நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகிறது. இந்தி ஒளிபரப்பைத் தொடர்ந்து பிராந்திய மொழிகளிலும் ஒலிபரப்பப்படுகிறது.
அதன்படி இந்த மாதத்துக்கான மன் கீ பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி சில இடங்களில் கோவிட்-19 அதிகரித்து வருகிறது. அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தூய்மையை உறுதி செய்ய வேண்டும் என வலியிறுத்தி இருக்கிறார்.
தகுதிநீக்கப்பட்ட எம்.பி.: டிவிட்டர் பயோவை மாற்றிய ராகுல் காந்தி!
உடல் உறுப்பு தானம்
உடல் உறுப்பு தானம் செய்வதை எளிதாக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்கை வகுக்கப்படுகிறது. மாநிலங்களின் இருப்பிடம் என்ற நிபந்தனையை நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது, நோயாளி நாட்டின் எந்த மாநிலத்திற்கும் சென்று உறுப்பு பெற பதிவு செய்ய முடியும்.
2013ஆம் ஆண்டில், நாட்டில் 5,000 க்கும் குறைவான நபர்களே உடல் உறுப்பு தானம் செய்தனர். 2022 இல், இந்த எண்ணிக்கை 15,000 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. உடல் உறுப்பு தானம் என்பது ஒருவருக்கு உயிர் கொடுக்க முக்கியமான வழியாகிவிட்டது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடலை தானம் செய்தால், அது எட்டு முதல் ஒன்பது பேர் வரை புதிய வாழ்க்கையைப் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது என்று கூறப்படுகிறது.
குடும்பத் தலைவிகள் கவனத்திற்கு! ரூ.1000 உரிமைத் தொகை பெற இதைச் செய்யவேண்டுமாம்!
பெண் சக்தி
இந்தியாவின் பெண்களின் சக்தி முன்னணியில் இருந்துவருகிறது. தயாரிப்பாளர் குணீத் மோங்கா மற்றும் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஆகியோர் தங்களின் 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படத்திற்காக ஆஸ்கார் விருதை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் கிரிக்கெட் அணி டி-20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
அனைத்து துறைகளிலும் பெண்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஐ.நா.வின் பணியின் கீழ் அமைதி காக்கும் பணியில் பெண்கள் மட்டுமே உள்ள ஒரு படைப்பிரிவையும் இந்தியா நிறுத்தியுள்ளது. குரூப் கேப்டன் ஷாலிஜா தாமி, போர்ப் பிரிவில் கமாண்ட் நியமனம் பெற்ற முதல் பெண் விமானப்படை அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதேபோல், சியாச்சினில் நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை இந்திய ராணுவத்தின் கேப்டன் ஷிவா சவுகான் பெற்றுள்ளார்.
இன்று, இந்தியாவின் திறன் பெண்களின் சக்தியிலிருந்து வெளிப்படுகிறது. ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் சுரேகா யாதவ் மேலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளார். வந்தே பாரத் ரயிலின் முதல் பெண் லோகோ பைலட் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். நாகாலாந்தில், 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, இரண்டு பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபைக்குத் தேர்வாகியுள்ளனர்.
டெல்லியில் தடையை மீறி காங். சத்தியாகிரகப் போராட்டம்: கார்கே, பிரியங்கா பங்கேற்பு
சௌராஷ்டிரா - தமிழ் சங்கமம்
இந்தியாவில் சோலார் இயக்கம் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. சூரிய ஆற்றல் துறையில் இந்தியா முன்னேறி வரும் வேகம் மிகப்பெரிய சாதனை. அனைத்து பகல் நேரத் தேவைகளுக்கும் 100% சுத்தமான ஆற்றலைப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மாவட்டம் என்ற பெருமையை டையூ பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள எம்எஸ்ஆர்-ஆலிவ் ஹவுசிங் சொசைட்டி மக்கள், சோலார் மூலம் சொசைட்டியை நடத்துவது என்று முடிவுசெய்து, அனைவரும் சேர்ந்து சோலார் பேனல்களை நிறுவியுள்ளனர்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, சௌராஷ்டிராவைச் சேர்ந்த பலர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறினர். இவர்கள் இன்றும் 'சௌராஷ்டிரத் தமிழர்' என்று அழைக்கப்படுகிறார்கள். 'சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம்' குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் ஏப்ரல் 17 முதல் 30 வரை நடைபெறும். சௌராஷ்டிரர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான ஆயிரம் ஆண்டுகால தொடர்பை புதுப்பிக்கும் வகையில் இந்த சங்கம நிகழ்ச்சி நடைபெறும்.
250 ஆண்டுகள் சிறை தண்டனை! ரூ.4000 கோடி சிட்பண்ட் மோசடி வழக்கில் அதிரடி தீர்ப்பு
பூலே, அம்பேத்கர்
வீர் லசித் போர்ஃபுகான் 400வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். வீர் லசித் போர்ஃபுகான் கொடுங்கோல் முகலாய ஆட்சியில் இருந்து கவுகாத்தியை விடுவித்தார். ஏப்ரல் மாதத்தில், சமூகத்தில் இருந்து பாகுபாடுகளை ஒழிப்பதில் முன்னோடியான மகாத்மா ஜோதிபா பூலே மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகிய இரு சிறந்த ஆளுமைகளின் பிறந்தநாளையும் கொண்டாடுகிறோம்.
வரும் ஏப்ரல் மாத மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 100வது முறையாக உரையாற்ற இருக்கிறார். அந்த நிகழ்ச்சியை நாடு முழுவதும் ஒலிபரப்ப மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.
கர்நாடகாவில் ஜேடிஎஸ் பஞ்சரத்ன யாத்திரையில் எஞ்சிய உணவைத் தின்ற 15 கால்நடைகள் சாவு