குடும்பத் தலைவிகள் கவனத்திற்கு! ரூ.1000 உரிமைத் தொகை பெற இதைச் செய்யவேண்டுமாம்!

தமிழ்நாடு அரசு குடும்ப தலைவிகளுக்கு வழங்கவுள்ள ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை வங்கிக் கணக்குகளில் செலுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilnadu govt's Rs 1000 aid for women likely to be deposited in Bank accounts

தமிழ்நாடு அரசு குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 மாதாந்திர உதவித்தொகையை ரொக்கமாக வழங்கமால் வங்கியில் செலுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. மார்ச் 20ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2023-24 நிதி ஆண்டுக்காண தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாள் முதல் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறினார். திட்டம் செயல்படுத்தப்பட இன்னும் சுமார் 3 மாத கால அவகாசம் உள்ள நிலையில், குடும்பத் தலைவிகள் அனைவரும் உரிமைத்தொகையை பெற ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

பெண்களின் சக்தி இந்தியாவின் திறனுக்கு சாட்சி: மன் கீ பாத் உரையில் பிரதமர் பாராட்டு

Tamilnadu govt's Rs 1000 aid for women likely to be deposited in Bank accounts

அரசு தகுதி உடைய பெண்களுக்கு வழங்கப்படும் என்று கூறி இருக்கிறது. ஆனால் உரிமைத்தொகை பெறுவதற்கு என்னென்ன தகுதிகள் தேவை என்று குறிப்பிடவில்லை. இதுகுறித்து எதிர்க்கட்சிகளும் அரசை விமர்சித்து வரும் சூழலில், எதன் அடிப்படையில் தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்ற விவரமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசு ரூ.1000 உரிமைத்தொகை பெறுவதற்குத் தகுதியானவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது.  தமிழக அரசு வழங்கும் இந்த உரிமைத்தொகை ரொக்கப் பணமாகக் கொடுக்கப்படாது என்றும் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

எனவே, தகுதியுடைய பெண்கள் உரிமைத்தொகையைப் பெற குடும்ப அட்டையுடன் வங்கிக் கணக்கும் வைத்திருக்க வேண்டி இருக்கும். வங்கிக் கணக்கு இல்லாத பெண்கள் இந்த உரிமைத்தொகையைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம் என்பதால், திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்கூட்டியே வங்கிக் கணக்கு தொடங்கி வைத்துக்கொள்வது நல்லது என்று கூறப்படுகிறது.

தகுதிநீக்கப்பட்ட எம்.பி.: டிவிட்டர் பயோவை மாற்றிய ராகுல் காந்தி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios