மகனிடம் கூறி மகளை கற்பழிக்க வைத்த தாய்! பதறவைக்கும் அதிர்ச்சி வாக்குமூலம்!!!
அந்த விசாரணையில் காணாமல் போன குழந்தையின் தந்தைக்கு இரண்டு மனைவிகள் என்பது தெரியவந்தது. காணாமல் போன சிறுமி அவருக்கும், அவருடைய இரண்டாவது மனைவிக்கும் பிறந்த குழந்தை என்பது தெரியவந்தது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து விசாரணையை போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்தனர்.
அந்த விசாரணையில் காணாமல் போன குழந்தையின் தந்தைக்கு இரண்டு மனைவிகள் என்பது தெரியவந்தது. காணாமல் போன சிறுமி அவருக்கும், அவருடைய இரண்டாவது மனைவிக்கும் பிறந்த குழந்தை என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அவருடைய இரண்டு மனைவிகளிடமும், உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் காணாமல் போன சிறுமி கடந்த இரண்டாம் தேதி காணாமல் போன பகுதியின் அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் உடல் உறுப்புகள் சிதைவடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டால். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன் படி, இறந்த சிறுமியின் தந்தை அந்த சிறுமியின் மீது அளவு கடந்த பாசத்தினை செலுத்தியுள்ளார். இது பிடிக்காத அவருடைய மூத்த மனைவி பலமுறை அவரிடம் சண்டையிட்டுள்ளார். தன்னுடைய மூத்த மகனின் மீது பாசம் செலுத்தாமல் இரண்டாவது மனைவியின் மகளுக்கு பாசம் செலுத்துவதை அவர் விரும்பவில்லை. இதனால் கோபமடைந்த அந்த பெண்,சிறுமியை கடத்தி காட்டு பகுதிக்கு கொண்டுசென்றுள்ளார்.
காட்டுப்பகுதியில் வைத்து தன்னுடைய 14 வயது மகனை அந்த சிறுமியை கற்பழிக்கும் படி கூறிவிட்டு, அதன்படி அந்த குழந்தையை கொலை செய்துள்ளனர். அதன் பிறகு ஆசிட்டை ஊற்றிவிட்டு உடலை சிதைத்துள்ளனர். மகள் ஸ்தானத்தில் உள்ள சிறுமியை தன்னுடைய மகனை வைத்தே கற்பழிக்கவைத்தது நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.