வயநாட்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து: 9 தொழிலாளர்கள் பலி; 2 பேர் நிலை கவலைக்கிடம்
வயநாட்டில் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 9 பேர் பலி பலியாகியுள்ளனர். மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மானந்தவாடியில் வெள்ளிக்கிழமை ஜீப் கவிழ்ந்து 25 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஓட்டுநர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
மாலை 4:30 மணியளவில் தலப்புழாவில் கண்ணோத்மலை அருகே தோட்டத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜீப் முற்றிலும் சேதமடைந்தது. கீழே விழுந்ததில் வாகனம் இரண்டு துண்டுகளாக உடைந்தது.
மற்ற தொழிலாளர்கள் வேலை முடிந்து திரும்பும் வழியில் விபத்து நடந்தது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் முதலில் பயணிகளில் ஐந்து பேர் இறந்து கிடப்பதைக் கண்டனர். விபத்தில் உயிரிழந்த அனைவரும் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டைலாக சூரியனைத் திரும்பிப் பார்த்த பிரக்யான் ரோவர்! லேண்டரில் இருந்து ஈஸியாக இறங்கியது எப்படி?
13 பயணிகளில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்கள் மகிமா லா எண் 6 காலனியைச் சேர்ந்த ராணி, சாந்தா, சின்னம்மா, லீலா, ஷாஜா, ரபியா, ஷோபனா, மரியக்கா மற்றும் வசந்தா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மற்றவர்களின் விவரங்கள் இன்னும் பெறப்படவில்லை.
காயமடைந்தவர்கள் வயநாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கம்பமாலை தோட்டத்தில் வேலை முடிந்து தோட்டத் தொழிலாளர்கள் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்துள்ளது.
விபத்துக்குள்ளான ஜீப் தீபு டீ டிரேடிங் கம்பெனிக்கு சொந்தமானது. ஜீப் கண்ணமலா கொண்டை ஊசி வளைவு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து பாறைகள் நிறைந்த பள்ளத்தாக்கில் விழுந்தது. விபத்து நடந்த இந்தப் பகுதி மோசமான விபத்துக்கள் அதிகம் நடக்கும் ஆபத்தான பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, உயிரிழந்த பெண்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து மானந்தவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோட்ட வேலைக்குச் சென்ற பெண்கள் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காசோலையில் ஏன் இப்படி கையொப்பம் போடவேண்டும்? செக் மூலம் பணம் பெற இதைத் தெரிந்துகொள்வது அவசியம்!
ராகுல் காந்தி இரங்கல்:
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "வயநாட்டின் மானந்தவாடியில் பல தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உயிரைப் பறித்த சோகமான ஜீப் விபத்துக்கு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
"மாவட்ட அதிகாரிகளிடம் பேசி, விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். என் எண்ணங்கள் துயரப்படும் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ விஞ்ஞானி ஆவது தான் லட்சியமா? 10ஆம் வகுப்பில் இருந்தே திட்டமிட்டால் வெற்றி நிச்சயம்!