8 college students was died in education tour
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியில் மராத்தா பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 40 க்கும் மேற்பட்டோர் சித்துந்தர்க் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அப்போது, கடலில் குளிக்க சென்ற மாணவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் 8 மாணவர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர்.
