Asianet News TamilAsianet News Tamil

ஆண்டுக்கு ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.77,000... விவசாயிகளுக்கு அரசு அதிரடி அறிவிப்பு..!

நீர் வளத்தை மேம்படுத்தவும், நீர்மட்டத்தை உயர்த்தவும் விவசாய நிலத்தை குத்தகைக்கு விடும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏக்கருக்கு ரூ.77,000 என்ற விகிதத்தில் விவசாயிகளுக்கு டெல்லி மாநில அரசு வழங்க உள்ளது.

77,000 per acre per year
Author
India, First Published Jul 11, 2019, 5:42 PM IST

நீர் வளத்தை மேம்படுத்தவும், நீர்மட்டத்தை உயர்த்தவும் விவசாய நிலத்தை குத்தகைக்கு விடும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏக்கருக்கு ரூ.77,000 என்ற விகிதத்தில் விவசாயிகளுக்கு டெல்லி மாநில அரசு வழங்க உள்ளது.77,000 per acre per year

டெல்லியின் வீழ்ச்சியடைந்த நீர்மட்டத்தை காப்பாற்ற இயற்கை வழியில் தண்ணீரை சேமிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக அமைச்சரவைக் கூட்டத்தில் நீர் சேமிப்பு திட்டம் தொடர்பான துறைசார்ந்த குழுவின் அறிக்கைக்கு தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த லட்சிய திட்டத்திற்காக விவசாயிகள் தங்கள் நிலத்தை ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 77,000 என்ற விகிதத்தில் குத்தகைக்கு வழங்க மத்திய குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தங்கள் நிலத்திற்கு ஏற்ப தொகை வழங்கப்படும்.77,000 per acre per year

டெல்லி அரசாங்கத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், இதுபோன்ற திட்டம் நாட்டில் முதல் முறையாக, யமுனா நதியின் சமவெளி பகுதியில் இயற்கை வழிகளில் நீர் சேமிக்கப்படும். இந்த திட்டம் இந்த மாதத்தில் தொடங்க உள்ளது. குறிப்பாக டெல்லியில் கோடைகாலத்தில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை நீக்குவதற்கான மிக முக்கியமான திட்டம் இது என்று அவர் கூறினார். 77,000 per acre per year

இந்த திட்டத்தின் கீழ், யமுனா நதியின் சமவெளிகளின் கீழ் பல்லா மற்றும் வஜிராபாத் பகுதிகளில் நீர் சேகரிப்புக்காக பெரிய நீர்த்தேக்கங்கள் கட்டப்படும். மேலும், நதியின் ஓரத்தில் சிறிய குளங்கள் அமைக்கப்படும். மழையின் போது யமுனாவில் இருந்து வெளியேறும் தண்ணீரை அதில் சேகரிக்கப்படும் எனவும் கூறினார். இந்த திட்டத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios