கடந்த ஆண்டை விட இந்தாண்டு ரயில்வே வருவாய் 71% அதிகரிப்பு... மத்திய அரசு தகவல்!!

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ரயில்வே 71 சதவீதம் அதிகமாக வருவாய் ஈட்டியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

71 percentage increase in railway revenue this year compared to last year says central govt

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ரயில்வே 71 சதவீதம் அதிகமாக வருவாய் ஈட்டியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுக்குறித்த மத்திய அரசின் தகவலில், கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை 56.05 கோடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை பயணச்சீட்டு முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை 6 சதவீதம் அதிகரித்து 59.61 கோடியாக உள்ளது.

இதையும் படிங்க: இந்திய தபால் துறையில் அருமையான வேலை.. 8ம் வகுப்பு படித்தால் போதும் - உடனே அப்ளை பண்ணுங்க!

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை முன்பதிவு செய்த பயணிகள் மூலம் 46 சதவீதம் அதிகமாக ரூ.38483 கோடி ரூபாய் ஈட்டியது. அதன் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.26400 கோடி ஈட்டியிருந்தது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை முன்பதிவு இல்லா பயணச்சீட்டு பயணிகளின் எண்ணிக்கை 137 சதவீதம் அதிகரித்து 40197 லட்சமாக இருந்தது.

இதையும் படிங்க: ஹே ராம் முதல் மொழி திணிப்பு வரை.. கடைசியில் கமல் ஹாசனுக்கு ராகுல் கொடுத்த சர்ப்ரைஸ் - என்ன தெரியுமா?

இது அதன் முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் பயணிகளின் எண்ணிக்கை 16,968 ஆக இருந்தது. 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை முன்பதிவு இல்லா பயணச்சீட்டு பயணிகள் மூலமான வருவாய் 381 சதவீதம் அதிகரித்து ரூ.10.430 கோடியாக இருந்தது. இது அதன் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2169 கோடி அளவிற்கு வருவாய் ஈட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios