பிரம்மாண்ட கான்வாயுடன் மகாராஷ்டிரா புறப்பட்ட தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர்.. மிஷன் வெற்றி பெறுமா?

தெலுங்கானா முதல்வரும் பாரத சமிதி (பிஆர்எஸ்) தலைவருமான கே.சி.ஆர் மகாராஷ்டிராவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

600 vehicles.. Telangana Chief Minister KCR left for Maharashtra with a huge convoy.

அரசியலில் தேசிய தலைவராக உருவெடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும்,  பிஆர்எஸ் தலைவர் கேசிஆர், தனது கட்சியின் தேசிய இருப்பை, குறிப்பாக மகாராஷ்டிராவில் விரிவுபடுத்துவதில் ஆர்வமாக உள்ளார். இதற்காக மகாராஷ்டிராவில் உள்ள நகர்ப்புற குடிமை அமைப்புகளில் உள்ள 45,000 கிராமங்களில் தனது பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்கான ஒரு மாத கால திட்டத்தை கே.ஆர்.எஸ் கடந்த மாதம் அறிவித்தார்.

தனது கட்சியின் இந்த முயற்சியின் மூலம் மகாராஷ்டிராவின் அரசியலை மாற்றக்கூடும் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் "இந்தியா புதிய தலைமைக்காக காத்திருக்கிறது. தற்போதைய தலைவர்களால் இந்தியா சோர்வடைந்துள்ளது. இன்று நாங்கள் மகாராஷ்டிராவில் கவனம் செலுத்துகிறோம். நாளை நீங்கள் மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கரில் பணியாற்ற வேண்டும்.

மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கம் அளித்த அமித் ஷா!!

மகாராஷ்டிராவில் பயிற்சி பெற்ற கட்சித் தொண்டர்கள் கட்சியின் அடித்தளத்தை விரிவுபடுத்துவதற்காக நாட்டின் பிற மாநிலங்களுக்குச் செல்வார்கள். மகாராஷ்டிராவில் கட்சிப் பணிகள் தொடங்கியதும், வட இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கும் நான் ஓரிரு வாரங்களுக்குச் செல்வேன்.” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் 2 நாள் சுற்றுப்பயணமாக தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர். ஹைதராபாத்தில் இருந்து சாலை மார்க்கமாக மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் செல்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை 10 மணிக்கு பிரகதி பவனில் இருந்து ஷோலாப்பூரில் இருந்து மிகப்பெரிய கான்வாய் உடன் சந்திர சேகர் ராவ் புறப்பட்டு சென்றார்..

சுமார்ட 600 வாகனங்கள் கொண்ட பிரமாண்டமான கான்வாய் உடன் ஹைதராபாத்தில் இருந்து மும்பை வழியே சோலாப்பூர் வரை அவர் பயணிக்கிறார். முதலமைச்சருடன் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். 

மேலும், சோலாப்பூர் மாவட்டம் சிர்கோலியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ், மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் கிராந்திகிரண், மகிபால் ரெட்டி, பூபால் ரெட்டி, மாணிக் ராவ் மற்றும் பலர் அவருடன் சென்றுள்ளனர். ஷோலாபூரில் உள்ள உள்ளூர் தலைவர் பகீரத் பால்கே உட்பட பல தலைவர்கள் கே.சி.ஆர் முன்னிலையில் பி.ஆர்.எஸ் கட்சியில் இணைய உள்ளனர்.

இதை தொடர்ந்து நாளை, முதலமைச்சர் சந்திர சேகர ராவ் நாளை மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற கோயில்கள், பண்டரிபூரில் உள்ள வித்தோபருக்மிணி கோயில் மற்றும் துல்ஜாபூரில் உள்ள பவானிமாதா கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்த உள்ளார். அதன்பின்னர் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஹைதரபாத்திற்கு திரும்ப உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நாந்தேட், கந்தர் லோஹா, அவுரங்காபாத் மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் கேசிஆர் ஏற்கனவே பல பொதுக்கூட்டங்களை நடத்தியிருக்கிறார். நாக்பூரில் கட்சியின் முதல் நிரந்தர அலுவலகத்தை திறக்கப்பட்ட நிலையில், அவுரங்காபாத், சோலாப்பூர், புனே மற்றும் மும்பையில் நிரந்தர அலுவலகங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

மகாராஷ்டிராவில் 50 லட்சம் உறுப்பினர் பதிவு என்ற இலக்கை நோக்கி கட்சி நிர்வாகம் செயல்பட்டு வரும் நிலையில், கே.சி.ஆரின் இரண்டு நாள் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று அக்கட்சி நம்புகிறது.

நாளை மத்திய பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி! முழு நிகழ்ச்சி நிரல் இங்கே!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios