ஆக்ராவில் 5 வயது சிறுமி கோவிலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாலிபர் ஒருவர் சிறுமியை கோவிலுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த வீடியோ வைரல்.

சிறுமி கோவிலில் வைத்து பலாத்காரம்

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் வீட்டுக்கு அருகே 5 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் யாரும் இல்லாத நேரத்தில் நைசாக பேசி கோவிலுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் ஓடிவந்தனர். இதனை கண்ட வாலிபர் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார்.

வைரலான வீடியோ

ஆனால் அவரை விடாமல் மடக்கி பிடித்து அடித்து, உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். எனினும் வாலிபரின் குடும்பத்தினர், அவருக்கு மனநல பாதிப்பு உள்ளது என கூறியதன் அடிப்படையில் அந்நபரை போலீசார் விடுவித்தனர். இச்சம்பவம் கடந்த 18ம் தேதி கோவிலில் பலாத்காரம் செய்தது பற்றிய வீடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மனநல குறைபாடு இல்லை

இதுபற்றி தகவல் அறிந்ததும், உள்ளூர்வாசிகள் காவல் நிலையத்திற்கு சென்று முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நபர் மருந்து கடை ஒன்றில் வேலை செய்து வந்த விவரமும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்நபரை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு மனநல குறைபாடு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.

பொய்யான தகவல்கள்

அந்த வாலிபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவருடைய குடும்பத்தினர், அவர் மனநல பாதிக்கப்பட்டவர் என பொய்யான தகவல்களை அளித்தது தெரியவந்தது. மேலும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. கோவிலில் வைத்து சிறுமி பலாத்காரம் தொடர்பான வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.