பண்ணை வீட்டில் விடிய விடிய! வசமாக சிக்கிய 20 இளம்பெண்கள்! 11 இளைஞர்கள்! நடந்தது என்ன?
பெங்களூரு அருகே பண்ணை வீட்டில் நடந்த போதை ரேவ் பார்ட்டியில் 20 இளம்பெண்கள் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் சோதனை நடத்தியதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

பெங்களூரு
பெங்களூருவை அடுத்துள்ள தேவனஹள்ளி தாலுகாவின் கன்னமங்களா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த பண்ணை வீட்டில் அதிக சத்தத்துடன் டிஜே மியூசிக் ஒலித்தது. இதனால் கடுப்பான அக்கம் பக்கத்தினர் தேவனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதாவது அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி டிஜே மியூசிக் போட்டு தூக்கத்தை கெடுப்பதாகவும், இதுதொடர்பாக பார்ட்டி மேலாளரை பலமுறை கண்டித்தும் அதை கண்டுகொள்ளாமல் கல்லாக்கட்டுவதாக குற்றம் சாட்டிருந்தனர்.
சிக்கிய 20 இளம்பெண்கள்
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விரைந்து அதிரடி சோதனை நடத்தியதில் இளம்பெண்கள், இளைஞர்கள் என 30க்கும் மேற்பட்டோர் போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரை கண்டதும் தப்பிக்க முயற்சி செய்த இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களை விடாமல் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் பார்ட்டியில் பங்கேற்று போதை மயக்கத்தில் இருந்த 20 இளம்பெண்கள் உட்பட 31 பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
போதைப் பொருள் பறிமுதல்
அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இளைஞர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு இந்த போதை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் பண்ணை வீட்டில் தடை செய்யப்பட்ட விலை உயர்ந்த வெளிநாட்டு போதைப்பொருட்களான கோகைன், ஹைபிரிட் கஞ்சா, சரஸ் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேவ் பார்ட்டி என்ற பெயரில் விடிய விடிய ஆட்டம் போட்டு போதையில் எல்லைமீறிய 20 பெண்கள் உட்பட 31 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.