ராஜஸ்தான் மாநிலம்  பாரன் மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணைநண்பர்களுடன் சேர்ந்து இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரான் மாவட்டம் கோடாவில் உள்ள சாலையோர உணவகத்தில் கூலி வேலை செய்யும் சுஷ்மா என்ற பெண், சம்பவத்தன்று தனது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சுஷ்மாவின் குடும்பத்துக்கு  நன்கு பழக்கமானவரான சேட்டன் மீனா என்ற 21 வயது இளைஞர்  அவரை வீட்டில் விடுவதாகக் கூறி தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.

பின்னர் அவர் இருசக்கர வாகனத்தை  ஒதுக்குப்புறமான இடத்துக்கு கொண்டு சென்று தனது 5 நண்பர்களுடன் பாலியல் கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதாகவும், அதை வீடியோ படம் எடுத்து வெளியே சொன்னால் படத்தை அனைவரிடமும் காட்டிவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். ஆனால் சேட்டன் மீனா பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிட்டார்.

சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் கழித்து சுஷ்மா இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை கொன்றுவிடுவதாக 6 பேர் கும்பல் மிரட்டியதாலேயே புகார் கடந்த ஒரு மாதமாக அளிக்காமல் இருந்ததாகவும், ஆனால், சமூகவலைதளத்தில் வீடியோவை பகிர்ந்ததால் சுற்றுவட்டார பகுதிகளுக்கெல்லாம் இதுபரவி விட்டதாகவும், மிகுந்த மன உளைச்சலில் புகார் அளிப்பதாக சுஷ்மா தெரிவித்துள்ளார்.

இந்த பாலியல் பலாத்காரம் தொடர்பாக பாரன் மாவட்ட மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.