ஈவ் டீசிங் செய்த வாலிபர்....ரவுண்டு கட்டி செருப்பால் அடித்த பெண்கள்...!

பெண்களுக்கு எதிராக ஈவ் டீசிங்,பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கும் மாநிலங்களில் ராஜஸ்தான் மாநிலம்  இரண்டாவது இடத்தில உள்ளது.

இந்நிலையில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடும் நபர்களை  பெண்களே ரவுண்டு கட்டி தாக்க முற்படும் அளவிற்கு  பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களே ஒரு படி மேல் சென்று,தகுந்த பாடத்தை புகுத்தி விடுகின்றனர்.

ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப்புற பகுதியில்  பெண்களை ஈவ் டீசிங் செய்துள்ளதாக தெரிகிறது.

இதனை கண்ட மற்ற பெண்கள் அந்த  வாலிபரை  மடக்கி பிடித்து, வளைத்து வளைத்து  அடித்து துவைத்து எடுத்து விட்டனர்

அதிலும் குறிப்பாக ஐந்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாக சூழ்ந்துகொண்டு  தான்  அணிந்திருந்த செருப்பை கழட்டி அந்த வாலிபரை தாக்கிய வீடியோ  தற்போது வெளியாகி உள்ளது.

ஆனால், தமிழகத்தில் நாளுக்கு நாள்  பெண்களை கற்பழித்து கொலை செய்வதும்,ஒரு தலை காதல் என்ற பெயரில் கொலை செய்வதும்,குழந்தைகளுக்கு பாலியல்  துன்புறுத்தல கொடுப்பதுமாக உள்ளது.

நேற்று சென்னை கே.கே நகரில் அஸ்வினி என்ற மாணவியை  காதல் என்கிற காம மோகத்தால் கத்தியால் நடுரோட்டில்,அதுவும் பட்டப்பகலில் அழகேசன் என்பவர் தைரியமாக கொலை செய்துள்ளார்.

இதுதான் தமிழகத்தின் நிலைமை......ஈவ் டீசிங் செய்தாலே பெண்கள் ஒன்று கூடி  தங்களை தாங்காலே பார்த்துக் கொள்ளும் ஒரு முயற்சி இங்கு உள்ளதா என்பது  சந்தேகமே..... மாற்றம் வேண்டும்...