கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளை உள்ளாடைகளை கழற்ற சொன்ன விவகாரத்தில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளை உள்ளாடைகளை கழற்ற சொன்ன விவகாரத்தில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நீட் தேர்வு, கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்தது. நாடு முழுவதும் மொத்தம் 497 நகரங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடந்தது. தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்தில் 59 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. சென்னையில் மட்டும் 33 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடந்தது. தேர்வு மையத்திற்கு காலை 11.40 மணியில் இருந்து வரலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. அதன்படி, மாணவ, மாணவிகள் 11 மணியில் இருந்தே தேர்வு மையத்திற்கு வரத்தொடங்கினர்.
இதையும் படிங்க: உள்ளாடையை கழற்றியே ஆகணும்.. நீட் தேர்வில் சர்ச்சை - மாணவி பரபரப்பு புகார் !

சில தேர்வு மையங்களின் நுழைவுவாயில் பகுதியில் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு, முறையான பரிசோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மாணவிகள் ஆபரணங்கள் எதுவும் அணிந்து செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் மாணவர்கள் காப்பு, கம்மல், செயின், பெல்ட், முழுக்கை சட்டை அணிந்து வர தடை இருந்தது. அதேபோல், முழுக் கை சட்டை அணிந்து வந்தவர்களை மாற்று உடை அணிந்து வரும்படி திருப்பி அனுப்பினர். குறிப்பாக மாணவ, மாணவிகளின் தலைமுடி முதல் கால் பகுதி வரை முழுமையாக அதற்கான கருவியை கொண்டு பரிசோதித்தனர். கொரோனா தொற்றுக்கு இடையில் நீட் தேர்வு நடைபெற்றது. எனவே உடல் வெப்பநிலை பரிசோதனை, சமூக இடைவெளியை பின்பற்றிய படி தேர்வர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டதோடு, அவர்கள் அணிந்து வந்த முககவசத்தை வெளியே கழற்றிவிட்டு வரும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
இதையும் படிங்க: ஜீன்ஸ் பேண்ட் போடக்கூடாது என கண்டீஷன் போட்ட கணவன் கொலை... கல்யாணம் ஆன 4 மாதத்தில் புது பெண் வெறிச்செயல்.

இந்நிலையில் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் அயூரில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடைகளை கழற்ற சொல்லி, அதன்பின் தேர்வு எழுத அனுமதித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதை அடுத்து அந்த மாணவியின் தந்தை இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உண்மை கண்டறியும் குழுவை மத்திய கல்வித்துறை அமைத்துள்ளது. தேசிய தேர்வு முகமை உயர் அதிகாரிகள் கொண்ட இந்த குழுவினர், கொல்லம் சென்று இது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர். இந்த நிலையில், கொல்லத்தில் நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் தேர்வு முகமை பணியாளர்கள், 2 பேர் கல்லூரி ஊழியர்கள் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தேர்வு மைய வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இந்த சம்பவம் நடந்திருப்பது உறுதியாகி உள்ளது.
