ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் கடன் வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். 

இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பெண்களின் பங்களிப்பின் மூலமே நாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஆண் வாக்காளர்களுக்கு இணையாக பெண் வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர். நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அவசியம். சுய உதவிக்குழு மூலம் பெண்களுக்கு ரூ.1 லட்சம் கடன் உதவி அளிக்கப்படும். மக்களவையில் 78 பெண் எம்.பி.,க்கள் உள்ளனர். 

மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு வட்டி மானியம் வழங்கப்டும். சுய உதவிக்குழுவை சேர்ந்த ஒவ்வொரு பெண்ணிற்கும் ரூ.1 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என குறிப்பிட்டார். ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் கடன் வழங்கப்படும் எனவும் பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.