Asianet News TamilAsianet News Tamil

“468 மதுக்கடைகள் மூடல்.. அதிர்ச்சியில் குடிமகன்கள்” - அச்சச்சோ !

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும். அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்ற குரல் நீண்டகாலமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

468 Private Liquor Shops In Delhi To Shut From Aug 1
Author
First Published Aug 1, 2022, 8:00 PM IST

தேர்தல் நேரத்தில் இதே குரலை பிரதான கட்சிகள் எழுப்பவதும், ஆட்சிக்கு வந்த பிறகு மறந்துவிடுவதும் இயல்பாகி விட்டது. நாளுக்கு நாள் மதுக்கடைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே தவிர, குறையவில்லை என்பதே பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.  இந்நிலையில் டெல்லியில் நடைபெற்றுள்ள சம்பவம் போல நம் மாநிலத்திலும் நடக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

468 Private Liquor Shops In Delhi To Shut From Aug 1

அது என்னவென்றால்,  டெல்லியில் கடந்த 2021-2022 ஆம் ஆண்டுக்கான புதிய மதுக்கொள்கையை அம்மாநில அரசு கொண்டு வந்தது. அதன் படி மதுபானங்களை சில்லறையாக விற்பனை செய்யவும், வீட்டுக்கே டோர் லெலிவரி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த புதிய கொள்கையின் கீழ் 468 சில்லறை மதுபானக் கடைகள் நகரில் இயங்கி வந்தது.  டிரையல் என்னும் சோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்த புதிய கொள்கை நேற்றுடன் (ஜூலை 31 ) உடன் முடிவடைகிறது. 

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

இந்த நிலையில் இன்று முதல் (ஆகஸ்ட் 1)  மேற்குறிப்பிட்ட அனைத்து தனியார் மதுபான கடைகளையும் மூட உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு வழங்கிய உரிமத்தை திரும்ப பெற்றுள்ளது. இனி டெல்லி வாசிகள் அங்குள்ள அரசு மதுபான கடைகளில் மட்டுமே மதுக்களை வாங்கிக்கொள்ள முடியும். இது மதுப்பிரியர்கள் மற்றும் தனியார் மதுபான பிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் செயல்பட்டு வந்த 475 மதுபான கடைகளில் சுமார் 468 கடைகளை இன்று முதல் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

468 Private Liquor Shops In Delhi To Shut From Aug 1

மதுக்கடைகளின் உரிமம் காலாவதி ஆவதை தொடர்ந்து இக்கடைகளில் ஏற்கனவே மதுபான கொள்முதல் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக மதுபானங்களுக்கு கடந்த சில நாட்களாக கடும் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில் இன்று முதல் இக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் தலைநகர் டெல்லியில் மதுபானங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் கவலையில் இருக்கின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் மகள் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம் !

Follow Us:
Download App:
  • android
  • ios