பாஜக தலைவர் பைஜ்நாத் சிங் 400 கார் கான்வாயுடன் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி உள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
அரசியல் கட்சியினர் ஒரு கட்சியில் இருந்து மாற்று கட்சிக்கு செல்வதும், பின்னர் மீண்டும் அதே கட்சிக்கே திரும்புவதும் சாதாரண நிகழ்வு தான். அந்த வகையில் கடந்த 2020-ல் பாஜகவில் இணைந்த பைஜ்நாத் சிங், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி உள்ளார். அதுவும் சாதாரணமாக திரும்பவில்லை. மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரியிலிருந்து போபால் வரை 400 கார் கான்வாயுடன் காங்கிரஸுக்குத் திரும்பினார். 400 கார்கள் கொண்ட கான்வாய் சைரன்கள் கேட்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் மற்றும் மூத்த தலைவர் திக்விஜய் சிங் முன்னிலையில் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் போட்டியிட பாஜக சீட் வழங்கும் என்று பைஜ்நாத் சிங் எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால், தனக்கு பாஜக சீட் வழங்காது என்று, அவர் தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பாஜகவின் 15 மாவட்ட அளவிலான தலைவர்கள் பைஜ்நாத் சிங்குடன் காங்கிரசில் இணைந்தனர்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா: தலைமை தாங்கும் பிரதமர் மோடி!
பைஜ்நாத் சிங்கின் கான்வாய் வீடியோ வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் சைரன் குறித்து கேள்வி எழுப்பினர். ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு மற்றும் காவல்துறை போன்ற அவசர சேவைகளை வழங்கும் வாகனங்கள் சாலையில் சைரன்களைப் பயன்படுத்த மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஆனால் பைஜ்நாத் சிங்கின் கான்வாயில், சைரன்கள் பயன்படுத்தப்பட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்தது, இது காங்கிரஸின் "நிலப்பிரபுத்துவ மனநிலையை" பிரதிபலிப்பதாகக் கூறியது.
பாஜக செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஹிதேஷ் பாஜ்பாய் இதுகுறித்து பேசிய போது“ சைரன்கள் மற்றும் சட்டவிரோத பீக்கான்களைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் காங்கிரஸ் தலைவர்களின் மனநிலை இதுதான். பிரதமர் மோடி தெருக்களில் இருந்து விஐபி கலாச்சாரத்தை அகற்றினார். ஆனால் காங்கிரஸின் நிலப்பிரபுத்துவ மனநிலைதான் அவர்களை இதனை செய்ய தூண்டி உள்ளது. இதை நான் கடுமையாக விமர்சிப்பதுடன், நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று தெரிவித்தார்.
பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடை சட்டத்தை ரத்து.. கர்நாடக அமைச்சரவையில் முக்கிய முடிவு..
