குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் பலி: டெல்லியில் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் முக்கிய ஆலோசனை
டெல்லி திரும்பிய மோடி, உயர்மட்ட தலைவர்களை அழைத்து குவைத் தீ விபத்து குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். மீட்பு மற்றும் உதவி நடவடிக்கைகள் குறித்துக் உயர் அதிகாரிகள் பிரதமருக்கு எடுத்துரைத்தனர்.
குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்த நிலையில், தலைநகர் டெல்லியில் இந்த விபத்து குறித்து பிரதமர் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
தெற்கு குவைத்தில் அகமதி மாகாணத்தின் மங்கப் பகுதியில் ஆறு மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் 150க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். இந்நிலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அதிகாலையில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் உடனடியாக தீயை அணைக்க முடியவலிலை. இதனால் தீ வேகமாக பரவி அடுக்குமாடி குடியிருப்பின் பல பகுதிகளிலும் கொழுந்து விட்டு எரிந்தது.
மோடி 3.0 அரசில் கேபினெட் அமைச்சர்கள் என்ன படிச்சுருக்காங்க? கல்வித்தகுதி என்ன தெரியுமா?
தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால், தீ விபத்தில் சிக்கி 49 பேர் உயிரிழந்துவிட்டனர். தீ விபத்து நடந்த குடியிருப்பில் இந்தியர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். விபத்தில் உயிரிழந்தவர்களிலும் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
குறைந்தது 40 இந்தியர்கள் தீயில் கருகி இறந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கே.வி.சிங் அவசரமாக குவைத் புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான உதவிக்கு தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. +91 1800 309 3793 (இந்தியாவிற்குள்), வெளிநாடு எனில் +91 80 6900 9900, +91 80 6900 9901 என்ற இரு எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை கூறியுள்ளது.
மோடி ஆலோசனை:
இந்நிலையில் பிரதமரான நரேந்திர மோடி ஆந்திராவில் பாஜக கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார். பின், ஒடிசா சென்று பாஜகவின் முதல்வர் மோகன் சரண் மாஜி பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.
பிறகு சாவகாசமாக டெல்லி திரும்பிய மோடி, உயர்மட்ட தலைவர்களை அழைத்து குவைத் தீ விபத்து குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போதுர குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்பு மற்றும் உதவி நடவடிக்கைகள் குறித்துக் அதிகாரிகள் பிரதமருக்கு எடுத்துரைத்தனர். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் சம்பந்தபட்ட உயர் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
முதல்வரானார் மோகன் சரண் மாஜி! முதல் முறையாக ஒடிசாவில் பாஜக ஆட்சி ஆட்டம் ஆரம்பம்!