முதல்வரானார் மோகன் சரண் மாஜி! முதல் முறையாக ஒடிசாவில் பாஜக ஆட்சி ஆட்டம் ஆரம்பம்!

முதல்வர் மோகன் சரண் மாஜி உள்படி 22 அமைச்சர்கள் பதவியேற்றனர். கனக் வர்தன் சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர்.

Odisha CM Mohan Majhi, deputies sworn-in. Who all made it as cabinet ministers? sgb

பாரதிய ஜனதா கட்சியின் மோகன் சரண் மாஜி புதன்கிழமை ஒடிசாவில் முதலமைச்சராக பதவியேற்றார். கனக் வர்தன் சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர்.

மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நரேந்திர மோடி, பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் முதல்வர் மோகன் சரண் மாஜி உள்படி 22 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

ஒடிசாவின் புதிய முதல்வர் மாஜி 1997இல் கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் நான்கு சட்டப்பேரவைத் தேர்தல்களில் (2000, 2004, 2019, மற்றும் 2024) ஒவ்வொரு முறையும் கியோஜார் சட்டமன்றப் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக ஒடிசாவின் அரசியலில் மூத்த தலைவர் என்ற முறையில்  முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்திது ஆசி பெற்றார்.

மோடி 3.0 அரசில் கேபினெட் அமைச்சர்கள் என்ன படிச்சுருக்காங்க? கல்வித்தகுதி என்ன தெரியுமா?

கனக் வர்தன் சிங் தியோ (துணை முதல்வர்), பிரவதி பரிதா (துணை முதல்வர்), சுரேஷ் பூஜாரி, ரபி நாராயண் நாயக், நித்யானந்த் கோண்ட், க்ருஷ்ண சந்திர பத்ரா, பிருத்விராஜ் ஹரிச்சந்திரன், முகேஷ் மகாலிங், பிபூதி பூஷன் ஜெனா, டாக்டர் க்ருஷ்ண சந்திர மொஹபத்ரா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில், 2000ஆம் ஆண்டு முதல் அந்த மாநிலத்தில் இருந்த பிஜு ஜனதா தளத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 147 உறுப்பினர்களைக் கொண்ட ஒடிசா சட்டப் பேரவையில், இப்போது பாஜகவுக்கு 78 உறுப்பினர்களும், பிஜேடிக்கு 51 உறுப்பினர்களும், காங்கிரஸுக்கு 14 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலுடன் 21 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் மக்களவைத் தேர்தல் நடந்தது. அதில் பாஜக 20 தொகுதிகளை வென்றது. காங்கிரஸ் ஒரு இடத்தைப் பிடித்தது.

புதிய சர்ச்சையில் எலான் மஸ்க்! பயிற்சிப் பணிக்கு வந்த பெண்ணை படுக்கைக்கு அழைத்தாரா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios