Asianet News TamilAsianet News Tamil

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி 30% குறைப்பு… கிராம மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு!!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை 30 சதவிகிதம் மத்திய அரசு குறைத்துள்ளது. 

30 percentage reduction in funding for the MGNREGA
Author
First Published Feb 2, 2023, 12:35 AM IST

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை 30 சதவிகிதம் மத்திய அரசு குறைத்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத சட்டம் (MGNREGA) கடந்த 2005 ஆம் ஆண்டு ஆக.25 ஆம் தேதி இயற்றப்பட்டது. இந்த சட்டம் அனைத்து வயதினருக்கும் வருடத்திற்கு 100 நாட்கள் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு வழங்குகிறது. இந்திய அரசின் ஊரக மேம்பாட்டு அமைச்சகமானது மாநில அரசுகளுடன் இணைந்து இச்சட்டத்தின் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றது.

இதையும் படிங்க: மத்திய பட்ஜெட்டில் குறிப்பிட்ட ‘அமிர்த காலம்’ என்றால் என்ன?

இதனிடையே இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் முறையாக பணிகள் செய்யப்படுவது இல்லை என்றும், அதற்கான ஊதியமும் முறையாக கொடுப்பதில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த நிலையில் நேற்று (பிப்.01) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை 30 சதவிகிதம் குறைத்துள்ளது. இந்த திட்டத்துக்கு கடந்த  2021-22 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 98,468 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 2022-23 பட்ஜெட்டில், அது 73,000 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது.

இதையும் படிங்க: எதிர்கால இந்தியாவுக்கு முதல்படி.. மத்திய அரசின் 2023ம் ஆண்டு பட்ஜெட் குறித்து அப்போல்லோ பிரதாப் சி.ரெட்டி

இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து கடந்த ஆண்டு (2022–23) பட்ஜெட்டில், இதற்கான நிதியை மத்திய அரசு உயர்த்தியது. அதன்படி, 89,400 கோடி ரூபாயாக உயர்த்தி அறிவித்தது. இந்த நிலையில், தற்போது அத்திட்டத்திற்கான நிதியை 30 சதவிகிதம் மத்திய அரசு குறைத்துள்ளது. அதாவது, 60,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 29,400 கோடி ரூபாய் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios